IPS Transfers: மேலும் 32 காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்- தமிழ்நாடு அரசு அதிரடி
IPS Transfers: தமிழ்நாட்டில் 32 காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
IPS Transfers: இன்று ஏற்கனவே 24 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 32 காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்:
தமிழ்நாட்டில் இன்று மட்டும் 56 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ளார்.
மாநில மனித உரிமைகள் ஆணையரக காவல் கண்காணிப்பாளராக ஜெயலட்சுமி ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி ஆக வி.பத்ரி நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும எஸ்.பி ஆக பி.வி விஜயகார்த்திக் ராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு சிறப்பு அதிரடி காவல் கண்காணிப்பாளராக வி. சசிமோகன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளராக புளியந்தோப்பு துணை ஆணையர், ஈஸ்வரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு சிறப்பு படை எஸ்.பி ஆக வி, சசி மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சண்முக பிரியா எஸ்.பி, சென்னை குற்ற பிரிவு சி.ஐ.டி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சமீப காலமாக, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், தேர்தலுக்கு முன்பு, கடந்த மார்ச் மாதம், சென்னை ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளராக வி. அன்பு நியமிக்கப்பட்டார். மதுரை துணை ஆணையர் பி.பாலாஜி, காவலர் நலத்துறை ஏ.ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டார். சென்னையில் மாநில காவல் கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பாளராக எஸ். வனிதா நியமனம் செய்யப்பட்டார்.
Also Read: 24 காவல்துறை உயர் அதிகாரிகள் இடமாற்றம்.. நீலகிரி எஸ்.பி-ஆக நிஷா ஐபிஎஸ் நியமனம்!