மேலும் அறிய

Nainar Nagendran Case: ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்.. நயினார் நாகேந்திரன் உறவினர் உள்பட 2 பேர் ஆஜர்..!

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உறவினர் உள்பட 2 பேர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. அப்போது ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் இருந்து நெல்லை நோக்கிச் சென்ற ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.4 கோடி எடுத்துச் செல்லப்பட்டது தெரிய வந்தது. இதனால் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது தாம்பரம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் என தெரிய வந்தது. இந்த பணம் நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு செல்லப்பட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு தாம்பரம் போலீசார் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும் படி சம்மன் அனுப்பப்பட்டது.  இந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்க பத்து நாட்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், தாம்பரம் காவல்துறை அலுவலகம் சார்பில் இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியது. அதன்படி, மே-2ம் தேதி  அதாவது இன்று ஆஜராகும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றம் செய்து போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் கடந்த 26  ஆம் தேதி உத்தரவிட்டார். பின்னர் சிபிசிஐடி அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.  அதனை தொடர்ந்து நேற்று முன் தினம் பிடிப்பட்டவர்களிடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் நயினார் நாகேந்திரன் உறவினர்கள் இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முருகன் மற்றும் முருகனிடம் பணியாற்றும் ஆசைத்தம்பி ஆகிய இரண்டு பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியது. இன்று காலை 11 மணிக்குள் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.

சம்மன் அனுப்பப்பட்டதை தொடர்ந்து சிபிசிஐடி அலுவகலத்தில் நயினார் நாகேந்திரன் உறவினர் உள்பட 2 பேர் ஆஜராகியுள்ளனர். முருகன் மற்றும் ஆசைத்தம்பி இருவரும் நேரில் ஆஜராகியுள்ளனர். முருகனிடம் பணியாற்றும் ஜெய்சங்கர் என்பவரையும் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக்கிய வேலை காரணமாக அவர், ஆஜராக கால அவகாசம் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Embed widget