புனேவிலிருந்து 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வருகை..

சென்னைக்கு 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் உடனடியாக அனுப்பிவைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது

FOLLOW US: 

பிரதமர் மோடி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்திற்கு உடனடியாக 20 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது புனேவில் இருந்து தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் உடனடியாக அனுப்பிவைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா இரண்டாவது அலை பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா  உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு வேகமாக பரவி வருவது கவலை அளிக்கும் விதமாக உள்ளது. புனேவிலிருந்து 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வருகை..

தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கில் மீண்டும் கடுமையான கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு அதிகம் மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில், தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் வேகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியும், கொரோனா இரண்டாவது அலையை வெல்லவேண்டும் என்றால், அதற்கு உங்களின் ஒத்துழைப்பு முழுமையாக வேண்டும் என்று  சில தினங்களுக்கு முன்பு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுவனங்களுடன் முற்பகல் 12.30 மணிக்கு ஆலோசானை நடத்துகிறார். மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். தற்போது, பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு இந்த ஆலோசனை கூட்டங்களை நடத்துகிறார்.

Tags: chennai pune covidshield vaccine 2 lakh dose vaccines

தொடர்புடைய செய்திகள்

சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

BREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

BREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

சசிகலாவுடன் பேசும் அதிமுகவினருக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை..!

சசிகலாவுடன் பேசும் அதிமுகவினருக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை..!

Kodaikanal Moth Update: பிரம்மாண்ட  கூடாரம் கட்டிய அந்துப்பூச்சி - ஆர்வத்துடன் பார்க்கும் மக்கள்!

Kodaikanal Moth Update: பிரம்மாண்ட  கூடாரம் கட்டிய அந்துப்பூச்சி - ஆர்வத்துடன் பார்க்கும் மக்கள்!

Covid-19 Death Underreporting: 1.13 லட்சம் கொரோனா மரணங்கள் மறைப்பு; ராமதாஸ் குற்றச்சாட்டு

Covid-19 Death Underreporting: 1.13 லட்சம் கொரோனா மரணங்கள் மறைப்பு; ராமதாஸ் குற்றச்சாட்டு

டாப் நியூஸ்

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் 5,839 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் 5,839 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது

100 கோடி கடன்... ஒன்றரை கோடி கமிஷன்! ‛தங்க மகன்’ ஹரிநாடாருக்கு அடுத்தடுத்து பங்கம்!

100 கோடி கடன்... ஒன்றரை கோடி கமிஷன்! ‛தங்க மகன்’ ஹரிநாடாருக்கு அடுத்தடுத்து பங்கம்!

Gold hall marking: இன்று முதல் அமலுக்கு வரும் ஹால் மார்கிங்; தங்கப் பிரியர்கள் கட்டாயம் இதை படிங்க!

Gold hall marking: இன்று முதல் அமலுக்கு வரும் ஹால் மார்கிங்; தங்கப் பிரியர்கள் கட்டாயம் இதை படிங்க!