மேலும் அறிய

16 மீனவர்களை விடுவிக்க கோரி அரசுக்கு நாகை மீனவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை

கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரை மீட்டு, வாழ்வாதாரமான படகுகளை விடுவித்து தர வேண்டும் என மத்திய, மாநில அரசுக்கு நாகை மீனவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 7ம் தேதி நூற்றுக்கு மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 16 பேரையும் அவர்களது இரு விசைப்படகுகளையும் சிறைபிடித்தனர். சிறைபிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் மற்றும் நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த ஆனந்தமணி, ராஜா, ரவி, மதிபாலன் படகு உரிமையாளர் வேல்மயில் உள்ளிட்ட 16 பேரை இலங்கை காங்கேசன் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மீனவர்கள் சிறப்பிடிக்கப்பட்ட சம்பவம் அறிந்து நாகை அக்கரைப்பேட்டையில் உள்ள அவரது உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். 
 
அப்போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரை மீட்டு,  பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்களது வாழ்வாதாரமான படகுகளையும் மத்திய, மாநில அரசுகள் விடுவித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை மீனவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
தொடர்ந்து இலங்கை மீனவர்களாலும் கடற் கொள்ளையர்கள் கடுமையான ஆயுதங்களால் தாக்கப்படுவதும் பிடித்து வைத்திருக்கும் மீன்கள் வலைகள் உள்ளிட்ட மீன் பிடி உபகரணங்களை கொள்ளையடித்துச் செல்வதும்,இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் சம்பவத்தாலும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல அச்சம் எழுந்துள்ளதாக வேதனை தெரிவிக்கும் அப்பகுதி மீனவர்கள், கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
"தமிழ்நாட்டில் மதக்கலவரம்.. சதி செய்றாங்க" அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த  சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
கரூர் ரெங்கநாத சுவாமி ஆலயத்தில்  9ஆம்  நாள் நிகழ்ச்சியில் ஆண்டாள் திருக்கோலத்தில் திருவீதி  உலா
கரூர் ரெங்கநாத சுவாமி ஆலயத்தில் 9ஆம் நாள் நிகழ்ச்சியில் ஆண்டாள் திருக்கோலத்தில் திருவீதி உலா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!JD Vance : ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?JD Vancy | ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?School boy argue with teacher | ”SCHOOL-க்கு வெளியா வா உன்ன கொன்னுடுவன்” ஆசிரியரை மிரட்டிய மாணவன் | Kerala

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
"தமிழ்நாட்டில் மதக்கலவரம்.. சதி செய்றாங்க" அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த  சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
கரூர் ரெங்கநாத சுவாமி ஆலயத்தில்  9ஆம்  நாள் நிகழ்ச்சியில் ஆண்டாள் திருக்கோலத்தில் திருவீதி  உலா
கரூர் ரெங்கநாத சுவாமி ஆலயத்தில் 9ஆம் நாள் நிகழ்ச்சியில் ஆண்டாள் திருக்கோலத்தில் திருவீதி உலா
மோடிக்கு ஷாக்.. ஆதரவை வாபஸ் பெற்ற நிதிஷ் குமார்.. கவிழ்கிறதா பாஜக அரசு?
மோடிக்கு ஷாக்.. ஆதரவை வாபஸ் பெற்ற நிதிஷ் குமார்.. கவிழ்கிறதா பாஜக அரசு?
"இதை மட்டும் பண்ணாதீங்க சிந்தனை திறன் குறையும்" மாணவர்களுக்கு ஆளுநர் ரவி அட்வைஸ்!
Australian Open: ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்த சின்னர், ஷெல்டன்
ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்த சின்னர், ஷெல்டன்
CSE 2025: ஐஏஎஸ் ஆகலாமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு; இன்று முதல் பிப்.11 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
CSE 2025: ஐஏஎஸ் ஆகலாமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு; இன்று முதல் பிப்.11 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Embed widget