மேலும் அறிய

Pondicherry: புதுச்சேரி: நகர்ந்து வரும் மாண்டஸ் புயல்: 144 தடை உத்தரவு.. தயார் நிலையில் மீட்பு படை..

புயல் சின்னம் காரணமாக கன மழையுடன் 85 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் புதுச்சேரியில் பேனர்கள், பிளக்ஸ்கள், கட் அவுட் ஆகியவை வைக்க ஆட்சியர் 144 பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான மாண்டஸ்  புயல், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 5.30 மணி நிலவரப்படி  தென்மேற்கு வங்கக்கடலில்  காரைக்காலுக்கு  கிழக்கு-தென்கிழக்கே சுமார் 500 கீ.மி தொலைவிலும் மற்றும் சென்னைக்கு தென்கிழக்கே 580 கீ.மி தொலைவிலும் நிலவியது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம்-புதுவை-தெற்கு ஆந்திரா கடற்கரையில், புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே 9ம் தேதி நள்ளிரவில் கரையை கடக்க வாய்ப்புள்ளது. மேலும், டிசம்பர் 09 ஆம் தேதி நள்ளிரவில் மணிக்கு 85 கிமீ வேகத்தில் அதிகபட்சமாக 65-75 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

புயல் சின்னம் காரணமாக கன மழையுடன் 85 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் பேனர்கள், பிளக்ஸ்கள், கட் அவுட் ஆகியவை வைக்க ஆட்சியர் குற்றவியல் நடைமுறை சட்டம் 144 பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று நள்ளிரவு முதலே போலீசார் பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 3 துறைமுகங்களில் இரண்டு மற்றும் நான்கு புயல் எச்சரிக்கை கூண்டு  ஏற்றப்பட்டுள்ளது. 

எண்ணூர், தூத்துக்குடி,  பாம்பன் உள்ளிட்ட ஆறு துறைமுகங்களில் இரண்டாம் புயல் எச்சரிக்கை கூண்டு  ஏற்றப்பட்டுள்ளது. 

2 ஆம் எச்சரிக்கை கூண்டு புயல் உருவாகி உள்ளது என்பதை குறிக்கிறது அதேவேளையில் நான்காம் எண் துறைமுகம் மற்றும் கடல் பகுதிகள் சுற்றியுள்ள கிராமங்களுக்கு எச்சரிக்கை செய்வது ஆகும். 

தென்மேற்கு வங்கக் கடலில் “மண்டஸ்” புயல் (வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் கடற்கரைகளுக்கு சூறாவளி எச்சரிக்கை)

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான “மாண்டஸ்” புயல் கடந்த 3 மணி நேரத்தில் மணிக்கு 8 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று அதிகாலை 0230 மணி நேரத்தில் தென்மேற்கு வங்க கடலில் அமைந்தது. 

இது காரைக்காலில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 530 கீ.மி மற்றும் சென்னைக்கு தென்கிழக்கே 620 கீ.மி தொலைவில் உள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் டிசம்பர் 9 நள்ளிரவில் மணிக்கு 85 கிமீ வேகத்தில் அதிகபட்சமாக 65-75 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

மீனவர்கள் எச்சரிக்கை:

மீனவர்கள் டிசம்பர் 8 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல், டிசம்பர் 10 ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடலுக்கும், 

டிசம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் இலங்கை கடல்கறை, தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.

டிசம்பர் 08-10 தேதிகளில் ஆந்திரா கடற்கரை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு கடலுக்குச் செல்லும் மீனவர்கள் கரைக்குத் திரும்ப வேண்டும் அல்லது கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து  வழக்கு...என்ன சொன்னாங்க
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து வழக்கு...என்ன சொன்னாங்க
Embed widget