மேலும் அறிய
”கொடைக்கானலுக்கு இந்த வாகனங்கள் செல்ல அவசர தடை” அறிவித்தார் ஆட்சியர்..!

”கொடைக்கானலுக்கு இந்த வாகனங்கள் செல்ல அவசர தடை” அறிவித்தார் ஆட்சியர்..!
Source : ABPLive
12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சேசிஸ் வாகனங்கள் (சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்கள்), திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு இனி செல்ல தடை விதிக்கப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பரபரப்பு உத்தரவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தமிழ்நாடு மாநில போக்குவரத்து அதிகாரியின் இசைவுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இந்த நடைமுறை அறிவிக்கப்படுவதாகவும், இந்த அறிவிப்பு வரும் 18-11-2024 முதல் அமலுக்கு வரும் என்றும் மாவட்ட ஆட்சியரின் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
அரசியல்
கிரிக்கெட்
க்ரைம்
அரசியல்






















