Urban Localbody Election | இதுக்கு மேல கையில பணம் வச்சிக்கிட்டா சிக்கல்.! நெருங்கும் தேர்தலால் இறுகும் விதிகள்!
550 குழுக்கள் (8 மணி நேரத்திற்கு ஒரு குழு வீதம்) என மொத்தம்_1,650 எண்ணிக்கையில் பறக்கும் படை இயங்கி வருகிறது - தமிழ்நாடு தேர்தல் ஆணையம்
தமிழ்நாட்டில் இருக்கும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படவிருக்கிறது.
இதனையடுத்து தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மும்முரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், தேர்தல் பணிக்காக 1,650 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “ஒரு மாநகராட்சி ஒரு மண்டலத் (Zone)-திற்கு ஒன்று, நகராட்சிக்கு மற்றும் ஒரு பேரூராட்சிக்கு தலா ஒரு பறக்கும் படை வீதத்தில், பறக்கும் படைக்கு ஓர் செயற் குற்றவியல் நீதிபதி (Executive Magistrate) மற்றும் இரண்டு அல்லது மூன்று காவல்துறை காவலர், வீடியோகிராஃபர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
இப்பறக்கும் படைகள் மாதிரி நடத்தை விதி அமுலில் உள்ளவரை 24 மணி நேரமும் இயங்க வேண்டும்.. 24 மணி நேரமும் இயங்குகின்ற வகையில், எட்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றுப்பணி (shift) என்று இயங்கக்கூடிய வகையில் தேவைக்கேற்ப மாவட்டங்களில் பறக்கும் படைகளை மாவட்ட தேர்தல் அலுவலர்கள் அமைத்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நேர்மையாக நடைபெற மாதிரி நடத்தை விதி அமுலில் உள்ளதை பறக்கும் படைகள் கண்டிப்பாக உறுதி செய்தல் வேண்டும்.
மாதிரி நடத்தை விதி மீறல்கள், அச்சுறுத்தல், மிரட்டுதல், சமூக விரோத செயல்கள், வாக்காளர்களுக்கு மது மற்றும் பணம் ஸஞ்சமாக வழங்குதல் தொடர்பான புகார்களின் மீது முழு கவனம் செலுத்துவது பறக்கும் படைகளின் கடமையாகும்.
வேட்பாளரோ அல்லது அவரது முகவரோ அல்லது கட்சி தொண்டரோ, பொது மக்களோ, தகுதியான ஆவணங்கள் இல்லாமல் ரூ 50,000/-க்கு மேல் பணத்தை வாகனத்தில் எடுத்து சென்றாலோ, ரூ.10,000/-க்கு மேல் மதிப்புள்ள விளம்பரத் தட்டிகள், தேர்தல் பொருட்கள், போதைப் பொருட்கள், மது, ஆயுதங்கள் அல்லது அன்பளிப்பு பொருட்கள் அவற்றினை பறக்கும் படைகள் ஆய்வின் போது பறிமுதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பறக்கும் படைகளின் ஆய்வு மற்றும் பறிமுதல் செய்யும் அனைத்து நிகழ்வுகளையும் வீடியோ குழுவினால் பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது 550 குழுக்கள் (8 மணி நேரத்திற்கு ஒரு குழு வீதம்) என மொத்தம்_1,650 எண்ணிக்கையில் பறக்கும் படை இயங்கி வருகிறது.
பறிமுதல் செய்யப்படும் பணம் முழுவதும் நீதிமன்றத்தின் உத்திரவின்படி கருவூலத்தில் செலுத்த வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அலுவலக நேரத்திற்கு பின்பும், விடுமுறை நாட்களிலும் கருவூலத்தில் செலுத்துவதற்கு கருவூல் அலுவலகத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலர்களால் வழங்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்