Surya Wishes to MK Stalin: ‛உங்களால் தமிழகம் வளர்ச்சியடையும்’ ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து
‘தமிழகத்தின் உரிமைகளை மீட்க தமிழர்களின் ஒருமித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும்’ - முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்ட நிலையில், அவருக்கு நடிகர் சூர்யா வாழ்த்து கூறியுள்ளார்.
ராஜ்பவனில் இன்று எளிமையாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஸ்டாலினை தொடர்ந்து, புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இதையடுத்து, அனைவரும் ஆளுநருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்ட நிலையில், அவருக்கு நடிகர் சூர்யா வாழ்த்து கூறியுள்ளார். மேலும், புதிய அமைச்சர்களுக்கும் வாழ்த்து கூறினார்.
‘முடியுமா நம்மால்?’ என்பது தோல்விக்கு முன்பு தயக்கம்… ’முடிந்தே தீருவோம்!’ என்பது வெற்றிக்கான தொடக்கம்… ‘முத்தமிழ் அறிஞர்’ கலைஞர் கூறியதை தனது வாழ்த்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் சூர்யா.
மேலும் அந்த அறிக்கையில், ‘முடித்தே தீர வேண்டிய’ பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க, சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ‘மக்களின் முதல்வராக’ பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இன்று பதவி ஏற்க்கும் தமிழக முதல்வர் <a href="https://twitter.com/mkstalin?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>@mkstalin</a> அவர்களுக்கும் அமைச்சர் பெருமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!! <a href="https://t.co/AclBvTXu3F" rel='nofollow'>pic.twitter.com/AclBvTXu3F</a></p>— Suriya Sivakumar (@Suriya_offl) <a href="https://twitter.com/Suriya_offl/status/1390529629505560580?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>May 7, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
சுவாசிப்பதற்கு ‘உயிர் காற்று’ கூட கிடைக்காமல் மக்கல் அல்லல்படுகிற இந்த பேரிடர் காலத்தில், நீங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தங்கள் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி அடையும் என்று நம்புகிறோம். தங்களுக்கும், ஆற்றலும் அனுபவமும் நிறைந்த தமிழக அமைச்சர் பெருமக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள்.
தமிழகத்தின் உரிமைகளை மீட்க தமிழர்களின் ஒருமித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும்’ என்று கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி அழகிரி கலந்துக்கொண்டார். அவரை பார்த்ததும் உதயநிதி ஸ்டாலின் கட்டினைத்து வரவேற்றார்.
திமுக அமைச்சரவை பதவியேற்பு விழாவில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பல கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.





















