மேலும் அறிய

"விவசாயிகளுக்கு பிரச்சனை எழும்போதெல்லாம் ஓடோடி உதவிய கட்சி அதிமுகதான்" -எடப்பாடி பழனிசாமி

கால்நடை பூங்கா திட்டம் உள்ளிட்ட விவசாயிகள் பயனடையும் திட்டங்களை ஆமை வேகத்தில் திமுக அரசு செயல்படுத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.

சேலத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து விழா பேருறை ஆற்றிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எடப்பாடி பழனிசாமி, "வேளாண் பெறுமக்கள் இதுபோன்ற மாநாடு மூலம்தான் அடையாளம் காணப்படுகின்றனர். விவசாயிகளை வாழவைக்கும் மாநாடு இது. மாநாட்டில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளில் வெளிநாடு இறக்குமதிக்கு மானியம் தறுவதை நிறுத்தி, சுதேசி பொருட்களுக்கு மானியம் வழங்க வேண்டும்.

எத்தனால் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முக்கியமானவை. தற்போது, எத்தனாலை பயன்படுத்த வேண்டும் என பாரத பிரதமர் தெரிவித்து இதற்கான திட்டத்தையும் அறிவித்திருக்கிறார் என்றார். இதற்கு தொழில் தொடங்குவதற்கு முன்னுரிமை தரப்படவும் உள்ளது. இந்த திட்டம் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்" என்று தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், விவசாயத்துக்கு உயிராக இருப்பது தண்ணீர், நீர் மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதிமுக ஆட்சியில் நீர் மேலாண்மைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. நிலத்தடி நீர்மட்டம் உயர்த்துவதற்காக ஏரி, குளம் உள்ளிட்டவைகள் தூர்வார குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டது. ஏரி, குளங்களில் இருந்து அள்ளப்படும் மண் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இலவசமாக கொடுக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 600 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு தூர்வாரப்பட்டதால் பருவமழை பெய்து வரும் நிலை ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாமல் ஏரியில் தேங்கி நிற்கும் காட்சியை நாம் பார்க்க முடிகிறது.

இந்த நிலையை உருவாக்கி கொடுத்தோம். விவசாயிகளுக்கு பிரச்சனை எழும் போதெல்லாம் ஓடோடி உதவி கட்சி அதிமுகதான் என்று கூறினார். மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் கடலில் கலக்கிறது. ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டி அதன்மூலம் தண்ணீர் சேமித்து கோடைக்காலத்தில் தண்ணீர் பயன்படுத்தலாம் என்றுதான் உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை கொண்டு வந்தோம். 

இதற்காக சேலம் மாவட்டத்தில் வறண்ட 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் தீட்டப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் ஆமை வேதத்தில் இந்த திட்டம் நடைபெறுகிறது. நீரேற்று திட்டத்தின் மூலமாக 100 ஏரிகள் நிரப்பி இருந்தால் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றிருக்கும். நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கும். இந்த அரசாங்கம் ஆமை வேகத்தில் செயல்பட்டு வருகிறது. இனியாவது தூங்கிக் கொண்டிருக்கும் அரசாங்கம் துரிதமாக செயல்பட்டு வீணாக கடலில் கலந்துகொண்டு வரும் உபரிநீரை விவசாயிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எத்தனாலை பயன்படுத்த வேண்டும் என பாரத பிரதமர் தெரிவித்து இதற்கான திட்டத்தையும் அறிவித்திருக்கிறார்‌. இதற்கு தொழில் தொடங்குவதற்கு முன்னுரிமை தரப்படவும் உள்ளது. இந்த திட்டம் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அந்நிய செலாவணி குறைய வாய்ப்பு ஏற்படும் என்ற அவர், இந்த அற்புதமான திட்டத்தை பிரதமர் கொண்டு வந்துள்ளார்.

இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 95 சதவீதம் வங்கிகளில் கடன்பெறலாம். வேளாண் பெருமக்களுக்கு இந்த திட்டம் வாழ்வளிக்கும். அதேபோல அத்திக் கடவு அவினாசி திட்டம், காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. என்று கூறினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 LSG vs PBKS: பட்டையை கிளப்புமா பஞ்சாப்? ரன் வேட்டை நடத்துவார்களா பண்ட் பாய்ஸ்?
IPL 2025 LSG vs PBKS: பட்டையை கிளப்புமா பஞ்சாப்? ரன் வேட்டை நடத்துவார்களா பண்ட் பாய்ஸ்?
நாளை முக்கியமான நாள்.. சட்டசபையில் சம்பவம் செய்ய காத்திருக்கும் ஸ்டாலின்.. என்னவா இருக்கும்?
நாளை முக்கியமான நாள்.. சட்டசபையில் சம்பவம் செய்ய காத்திருக்கும் ஸ்டாலின்.. என்னவா இருக்கும்?
என்னாது நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. டிக் அடித்த ஆர்எஸ்எஸ்
என்னாது நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. டிக் அடித்த ஆர்எஸ்எஸ்
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Cadre Fight | மிரட்டல்..கல்வீச்சு..அடிதடி..அத்துமீறிய விசிக பெண் நிர்வாகி பரபரப்பு காட்சிகள்EPS And OPS Meets Modi: தமிழ்நாடு வரும் மோடி! EPS, OPS போடும் ப்ளான்! பாஜக கூட்டணியில் மாற்றம்?Annamalai BJP : அண்ணாமலை பதவி நீக்கம்? சீனுக்கு வந்த நயினார்! ஆட்டம் காட்டும் அமித்ஷாIrfan Controversy | ”அசிங்கமா இல்லையா..” இழிவுபடுத்திய இர்பான்! திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 LSG vs PBKS: பட்டையை கிளப்புமா பஞ்சாப்? ரன் வேட்டை நடத்துவார்களா பண்ட் பாய்ஸ்?
IPL 2025 LSG vs PBKS: பட்டையை கிளப்புமா பஞ்சாப்? ரன் வேட்டை நடத்துவார்களா பண்ட் பாய்ஸ்?
நாளை முக்கியமான நாள்.. சட்டசபையில் சம்பவம் செய்ய காத்திருக்கும் ஸ்டாலின்.. என்னவா இருக்கும்?
நாளை முக்கியமான நாள்.. சட்டசபையில் சம்பவம் செய்ய காத்திருக்கும் ஸ்டாலின்.. என்னவா இருக்கும்?
என்னாது நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. டிக் அடித்த ஆர்எஸ்எஸ்
என்னாது நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. டிக் அடித்த ஆர்எஸ்எஸ்
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Dhoni Retirement: ஓய்வு பெறுகிறாரா தோனி? பாதியிலே ஐபிஎல்-க்கு பை பை சொல்கிறாரா?
Dhoni Retirement: ஓய்வு பெறுகிறாரா தோனி? பாதியிலே ஐபிஎல்-க்கு பை பை சொல்கிறாரா?
திருச்சிக்கு வரும் Dolby Cinema.. சென்னைக்கு டப் கொடுக்கும் போலயே.. இவ்வளவு வசதிகளா ?
திருச்சிக்கு வரும் Dolby Cinema.. சென்னைக்கு டப் கொடுக்கும் போலயே.. இவ்வளவு வசதிகளா ?
Japan Earthquake: உலுக்கப்போகும் நிலநடுக்கம்! 3 லட்சம் மக்கள் உயிருக்கு ஆபத்து: ஜப்பான் அரசு வெளியிட்ட பகீர் அறிவிப்பு!
Japan Earthquake: உலுக்கப்போகும் நிலநடுக்கம்! 3 லட்சம் மக்கள் உயிருக்கு ஆபத்து: ஜப்பான் அரசு வெளியிட்ட பகீர் அறிவிப்பு!
Siragadikka Aasai: சிறடிக்க ஆசை ஹீரோயின் முதன்முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Siragadikka Aasai: சிறடிக்க ஆசை ஹீரோயின் முதன்முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Embed widget