மேலும் அறிய
Advertisement
தருமபுரி: அளவீடு செய்ய வந்த ரயில்வே அதிகாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள்
தருமபுரி-மொரப்பூர் ரயில்வே பாதையை அளவீடு செய்ய வந்த ரயில்வே அதிகாரிகளை தருமபுரி அடுத்த சவுளுப்பட்டி கிராம மக்கள் சிறை பிடிப்பு.
கடந்த 1901 ம் ஆண்டு முதல் 1945 வரை தருமபுரியில் இருந்து சுமார் 36 கிலோ மீட்டர் தூரமுள்ள மொரப்பூர் வழியாக சென்னைக்கு ரயில் பாதை இருந்து வந்தது. பின்னர் அந்த பாதை செயல்படுத்தாமல் இருந்த நிலையில் நீண்ட வருடங்களாக அப்பாதையை புதுப்பித்து தருமபுரியில் இருந்து சென்னைக்கு ரயில் போக்குவரத்தை செயல்படுத்த வேண்டும் என பொது மக்கள் மற்றும் வணிகர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்த நிலையில் கடந்த 2019 ம் ஆண்டு அன்றைய மத்திய அரசு சுமார் 388 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தருமபுரியில் இத்திட்டத்திற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் இத்திட்டம் செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர் செந்தில்குமார் இத்திட்டம் மீண்டும் செயல்படுத்த துறை அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சர்களை பல முறை நேரில் சென்று வேண்டுகோள் விடுத்து வந்தார். இதனால் தருமபுரி நகரில் பழைய இருப்பு பாதை அமைந்துள்ள பகுதிகளில் தனியார் ஆக்கிரமிப்புகள் இருப்பதாலும், மேலும் இதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கியும், போதிய பணம் வங்கி கணக்கில் செலுத்ததால் இப்பணிகள் செயல்படாமல் இருந்தது.
தற்போது தருமபுரி மொரப்பூர் புதிய இரயில் பாதை பணிகளின் நிலஅளவு எடுக்கும் பணி செயல்படுத்த 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கபட்டு நில அளவு எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில் பழைய பாதையிலேயே அளவிடும் பணிகள் நடைபெற்று முடிந்தது. ஆனால் தருமபுரி நகரில் பழைய பாதையில், அதிகளவில் வீடுகள் கட்டிடங்கள் இருப்பதால், நகர் பகுதியை விட்டு 8 கி.மீ. சுற்றி புதிய பாதையில் அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த புதிய பாதை தருமபுரி அடுத்த சவுளுப்பட்டி வழியாக வருகிறது. இந்த சவுளுப்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சவுளுப்பட்டி கிராமத்தில் தருமபுரி-மொரப்பூர் ரயில்வே பாதையை ரயில்வே துறை அதிகாரிகள் அளவீடு செய்ய முடிவு செய்து இன்று அப்பகுதியில் ரயில்வே துறை அதிகாரிகள் அளவீடு செய்ய வந்தனர். அதனையறிந்த அப்பகுதி மக்கள் அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை அனைவரும் ஒன்று திரண்டு சிறை பிடித்தனர்.
அப்போது ரயில்வே பாதை தங்களுக்கு வேண்டும்.ஆனால் தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்காதவாறு இருக்க வேண்டும் என்றும், தாங்கள் குடியிருக்கும் பகுதியில் வீடுகளை இடிக்காமல் காலியிடம் இருக்கும் பகுதியில் ரயில்வே பாதை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அதிகாரிகள் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
க்ரைம்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion