Velmurugan Warning: மீண்டும் ஒரு வீரப்பன் இந்த மண்ணில் தோன்றுவார்... கர்நாடக அரசுக்கு வேல்முருகன் எச்சரிக்கை
நீங்கள் மேகதாது அணை கட்டிய தீருவோம் என்று அடம் பிடித்தால், தர்மபுரி, சேலம் எல்லையில் வீரப்பன் போல மீண்டும் இந்த மண்ணில் தோன்றுவார்கள் அல்லது தமிழக வாழ்வுரிமைக் கட்சியால் தோற்றுவிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை.

சேலம் மாநகர் தாதகாப்பட்டி கேட் பகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இணைப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார்.
பின்னர் கூட்டத்தில் பேசிய அவர், ஒன்று இரண்டு சீட்டுக்காக துண்டு போடும் ஆட்கள் இல்லை நாம். முதல்வருக்கும் பெண் என்கிற அமைப்புக்கும் இந்த கூட்டம் குறித்த தகவல் போயிருக்கும். எடப்பாடி பழனிசாமி, விஜய் என ஆளுக்கு ஒரு வியூக வகுப்பாளர் வைத்துள்ளனர். பிரசாந்த் கிஷோரிடம் கற்றுக்கொண்டு பிரசாந்த் கிஷோர்க்கு சொல்லிக் கொடுக்கும் அளவிற்கு திமுக ஆட்களை வைத்துள்ளனர். அந்த அமைப்பு சொல்வதன் அடிப்படையில்தான் சீட் கிடைக்கும். நம் நாட்டின் முதல்வராக யார் அமர்ந்தாலும் தாய்மார்களின் தாலி அறுக்கும் மதுபான கடைகளை மூட வேண்டும். மதுபான கடைகளை மூடுபவர்களுடன் தான் கூட்டணிக்கு வருவோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வளர வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பாட்டாளி மக்கள் கட்சிக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். கட்சியின் மாநில இணை பொதுச் செயலாளராக இருந்தேன். அப்போது அன்புமணி ராமதாஸ் அரசியலுக்கு வந்தார். தமிழக அரசியல் களத்திற்கு அன்புமணி ராமதாசை கொண்டு வந்தவன் வேல்முருகன். ஒரு கட்சியில் ரத்தமும் சதையுமாக உணர்வு பூர்வமாக இருந்த போது அந்தக் கட்சி என்னை தூக்கி எறிந்தது. ஆனால் தற்போது ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒரு வார காலமாக என்னை சந்திக்க வேண்டும். ஒரு அப்பாயின்மென்ட் கொடுங்கள் உங்களைப் பார்த்து பாட்டாளி மக்கள் கட்சியின் பொது நிதி நிலை அறிக்கையை உங்கள் கைகளில் ஒப்படைக்க வேண்டும் என கேட்கிறார்கள் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசின் செயல்பாட்டை ஒரு பொழுதும் ஏற்க முடியாது. தொடர்ந்து ஆதிக்க இந்தியை விரட்டியடிப்போம். மக்கள் விரும்பினால் அவர்கள் உலகம் மொழி எதை வேண்டுமானாலும் விரும்பி படித்துக் கொள்ளலாம். ஆனால் இந்தி தான் படிக்க வேண்டும் தமிழ் மொழி அகற்றப்பட வேண்டும் என்பது போல் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டு அரசு பதவிகளில் 100% தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அரசு பதவிகளிலும், 90% மத்திய அரசின் பதவிகளை தமிழர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றார். அதற்கான முன்னறிப்புகளில் தமிழக முதல்வர் செய்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தமிழகத்தில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திலும் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும். தமிழ் படிக்காமல் இங்கு எந்த பள்ளியும் நடத்த முடியாது என்ற நிலையை உருவாக்க வேண்டும். அதற்கான சட்ட திருத்தத்தை நடைபெறுகின்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.
மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என்றால் தமிழகத் திரைப்படங்கள் கர்நாடகாவில் ஓடாது என்று வாட்டள் நாகராஜ் விடுத்த எச்சரிக்கைக்கு பதில் அளித்த அவர், வாட்டள் நாகராஜ் என்கின்ற முதியவரின் வாய்ச் சொல்லை நாங்கள் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அங்கு இருக்கக்கூடிய மொழிவெறியுடன் இருக்கக்கூடிய கர்நாடக வேதிய கும்பல்கள் தூண்டி விடுகிறார்கள். அவர்களை நான் கண்டிக்கிறேன். கர்நாடகாவின் துணை முதல்வர் பேச்சை கண்டிக்கிறேன். கர்நாடகா முதல்வர் நாங்கள் கட்டாயம் மேகதாது அணையை கட்டியே தீர்வோம் என அறிவித்திருக்கிறார். நீங்கள் மேகதாது அணை கட்டிய தீருவோம் என்று அடம் பிடித்தால், தர்மபுரி சேலம் எல்லையில் வீரப்பன் போல மீண்டும் இந்த மண்ணில் தோன்றுவார்கள். அல்லது தமிழக வாழ்வுரிமைக் கட்சியால் தோற்றுவிக்கப்படுவார்கள் என கர்நாடக வேதிய கும்பலுக்கும் கர்நாடகா அரசுக்கும் எச்சரிக்கை விடுப்பதாக தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

