Holiday: ஆடி பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் 2 நாள் விடுமுறை
சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை ஈடாக அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் 03.09.2022 மற்றும் 17.09.2022 அன்றும் பணி நாளாக உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் ஆடி பண்டிகை என்பது மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் ஆடி மாதம் பண்டிகையானது முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்து இருப்பதால் சேலம் மக்கள் மகிழ்ச்சியோடு ஆடி மாதத்தை வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் ஆடி 18 அன்று ஆடிப்பெருக்கு மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு 03.08.2022 புதன்கிழமை அன்றும், கோட்டை மாரியம்மன் திருக்கோவில் ஆடித் திருவிழா தினத்தை முன்னிட்டு 10.08.2022 புதன்கிழமை அன்றும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை ஈடாக அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் 03.09.2022 மற்றும் 17.09.2022 அன்றும் பணி நாளாக உத்தரவிட்டுள்ளார்.
இந்த மாதம் முழுவதும் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் திருக்கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். ஆடி முதல் நாள் தொடங்கி சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டும், அம்மாபேட்டை பலபட்டரை மாரியம்மன் கோவில், குகை மாரியம்மன் கோவில், சின்ன மாரியம்மன் திருக்கோவில் உள்ளிட்ட சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் திருக்கோவில்களில் அம்மனுக்கு தினமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. கோவில்களில் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக 1000 கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆடி முதல் வாரத்தில் அம்மனுக்கு பூச்சாட்டுதல், இரண்டாம் வாரம் கம்பளி நடுவது, ஆடிப்பதினெட்டு அன்று ஆடிப்பெருக்கு, மூன்றாம் வாரம் பூ கரகம் எடுப்பது, அலகு குத்துதல், பொங்கல் வைப்பது, வண்டி வேடிக்கை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பண்டிகை ரத்து செய்யப்பட்டது. கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் இந்த ஆண்டு மாரியம்மன் பண்டிகை கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சேலம் மாவட்டம் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்று ஆடி 18 அன்று காவிரி ஆற்றில் குளிப்பதற்கு ஏராளமான பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது காவேரி ஆற்றல் பொதுமக்கள் இறங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி காவிரி ஆற்றில் இறங்கும் முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆடிப்பெருக்கென்று காவேரி ஆற்றில் புனித நீராட அனுமதி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்