சேலம் அரசு மருத்துவமனையில் 3வது முறையாக மின்சார ஒயர் அறுந்து விழுந்து தீ விபத்து
அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி பிணவறை அருகேயுள்ள மின் கம்பம் மின் கசிவு காரணமாக திடீரென வெடிப்பு தீப்பிடித்து எரிந்தது.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு உயிர் சிகிச்சை பெரும் மருத்துவமனையாக திகழ்கிறது. தினசரி புறநோயாளிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுவதற்காக வந்து செல்கின்றனர். இது மட்டுமின்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்குகள் உள்ளது. இந்த நிலையில் பழைய குழந்தைகள் வார்டு பகுதியில் முன்புறம் மின் ஒயர்கள் அமைக்கப்பட்டு மகப்பேறு மற்றும் குழந்தை நலப்பிரிவு சிறப்பு வார்டு, புற நோயாளிகள் வார்டு என அனைத்து இடத்திற்கும் மின் வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் அருகில் ஜெனரேட்டர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு அங்கு இருந்த மின் ஒயர் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. மின் ஒயர் அருந்து விழுந்ததால் நெருப்பு மற்றும் சிறிதளவு புகைமூட்டம் ஏற்பட்டது. இதனைப் பார்த்த பொதுமக்கள் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை காவல்துறையினருக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மின்கம்பியில் ஏற்பட்ட பழுது குறித்து மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுத்து உடனடியாக மின்சார இணைப்பை துண்டித்தனர். முன்னதாக மருத்துவமனை ஊழியர்கள் மின்சாரத்தை நிறுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர். தொடர்ந்து மருத்துவமனை மின் வாரிய ஊழியர்கள் மின் இணைப்புகளை சரி செய்தனர். இந்த தீ விபத்தால் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
தீ விபத்து அறிந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். உடனடியாக மின்சாரத்தை நிறுத்தியதால் பெரும் பசும்பாகிடும் தவிர்க்கப்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் மேலாக மின்சாரம் இல்லாமல் மருத்துவமனை வளாகம் இருளில் மூழ்கியது. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தரைத்தளத்தில் அமைக்கப்பட்ட மின் ஒயர்கள் அனைத்தும் சரி செய்யப்பட்டது. பின்னர் தரைத்தளத்தில் உள்ள பெயர்களை கட்டிடத்தில் மேல் பகுதியில் செல்லுமாறு அமைக்கப்பட்டது. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி பிணவறை அருகேயுள்ள மின் கம்பம் மின் கசிவு காரணமாக திடீரென வெடிப்பு தீப்பிடித்து எரிந்தது. இதேபோன்று ஜூலை மாதம் 27 ஆம் தேதி புறநோயாளிகள் சிகிச்சை போர்டு அருகையும் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.