மேலும் அறிய

உயிரிழந்த மீனவர் உடலில் சுடப்பட்டதற்கான எந்தவித அறிகுறியும் இல்லை... உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு!

முதல்வர் கர்நாடகா வனத்துறையால் சுடப்பட்டு உயிரிழந்த என அறிக்கை வெளியிட்டுள்ளார். தற்போது சுடப்பட்டதற்கான தடையம் இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தமிழக, கர்நாடக எல்லையில் உள்ள பாலாறு வனப்பகுதியில் தமிழக மீனவர்கள் காவிரிநீர் பிடிப்பு பகுதியான பாலாறு கலக்கும் இடத்தில் பரிசலில் சென்று மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பரிசல்களில் சென்று நான்கிற்கும் மேற்பட்ட மீனவர்கள் பாலாற்றில் மீன்பிடித்து உள்ளனர். அப்பொழுது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அதில் சிலர் தப்பி சென்றுவிட்டனர். ஆனால் கோவிந்தபாடியை சேர்ந்த ராஜாவை காணவில்லை என்பதால் கர்நாடகா வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியாகி இருக்கலாம் என கிராம மக்கள் பாலாற்று ஆற்றங்கரையில் தேடினர். மேலும் பாலாறு ஆற்றங்கரையில் இருந்த பரிசல்களையும்,வலைகளையும் கர்நாடக வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

உயிரிழந்த மீனவர் உடலில் சுடப்பட்டதற்கான எந்தவித அறிகுறியும் இல்லை... உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு!

இந்த நிலையில் நேற்று காலை காணாமல் போன மீனவர் ராஜாவின் உடல் தமிழக கர்நாடகா எல்லை பகுதியான அடி பாலாறு காவிரி ஆறு பகுதியில் மிதந்து வந்தது. இதனை தமிழ்நாடு காவல்துறையினர் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு மீனவர் ராஜா எப்படி இறந்தார் என்பது குறித்து தகவல் தெரியும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மீனவர் உயிரிழந்த சம்பவத்தால் தமிழக கர்நாடகா எல்லையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் கர்நாடக மாநிலம் கோபிநத்தம் மண்டல வன அலுவலர் சம்பத் படேல் அளித்த புகாரின் அடிப்படையில் கர்நாடகா காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராஜா உள்ளிட்ட நான்கு பேர் கடந்த 14 ஆம் தேதி நள்ளிரவில் அடிபாலாறு வனப்பகுதியில் வேட்டைக்கு சென்றார்கள் என்றும், அவர்களிடமிருந்து வேட்டையாடப்பட்ட மான் இறைச்சி மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கர்நாடகா காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் மீன் பிடிக்க சென்றவர்கள் வனவிலங்குகளை வேட்டையாட சென்றது ஏன் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த மீனவர் உடலில் சுடப்பட்டதற்கான எந்தவித அறிகுறியும் இல்லை... உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு!

உயிரிழந்த மீனவர் ராஜாவின் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்து வந்தனர். மேலும் கர்நாடக வனத்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் இன்று காலை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் மற்றும் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் தலைமையில் ராஜாவின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்றப்பட்ட நிலையில் உறவினர்கள் அனைவரும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு வந்தனர். பிரேத பரிசோதனைக்கு அவர்கள் தரப்பிலிருந்து ஒரு மருத்துவர் மற்றும் வீடியோபதிவு செய்ய ஒரு நபரை அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதனால் மாலை வரை பிரேத பரிசோதனை நடத்தப்படாமல் இருந்தது. அதேசமயம் உயிரிழந்த ராஜாவின் மனைவி சகோதரர் தாய் மற்றும் உறவினர்களிடம் சேலம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்தினி தலைமையில் விசாரணை நடத்தினார். பின்னர் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரேத பரிசோதனைக்கு ஒப்புதல் அளித்தனர்.

இதையடுத்து பிரேத பரிசோதனை நடைபெற்றது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடலில் துப்பாக்கியால் சுடப்பட்டதற்கு எந்தவித தடையமும் இல்லை என தகவல் வெளியாகியது. உடனடியாக ராஜாவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முதல்வர் கர்நாடகா வனத்துறையால் சுடப்பட்டு உயிரிழந்த என அறிக்கை வெளியிட்டுள்ளார். தற்போது சுடப்பட்டதற்கான தடையும் இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர் யார் சொல்வது உண்மை என கேள்வி எழுப்பினர். முழுமையாக பிரேத பரிசோதனை அறிக்கை வரும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
Renault Kiger Vs Nexon Fronx: நெக்ஸான், ஃப்ராங்க்ஸ்-க்கு டஃப்; குறைந்த விலையில் ஸ்டைல், அம்சங்கள் நிறைந்த ரெனால்ட் கைகர் எப்படி.?
நெக்ஸான், ஃப்ராங்க்ஸ்-க்கு டஃப்; குறைந்த விலையில் ஸ்டைல், அம்சங்கள் நிறைந்த ரெனால்ட் கைகர் எப்படி.?
Affordable Long Range EVs: பெட்ரோல், டீசல் விலை கூடிடுமேன்னு பயப்பட்றீங்களா.? EV கார் வாங்குங்க; மலிவான கார்கள் லிஸ்ட் இதோ
பெட்ரோல், டீசல் விலை கூடிடுமேன்னு பயப்பட்றீங்களா.? EV கார் வாங்குங்க; மலிவான கார்கள் லிஸ்ட் இதோ
Embed widget