மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
ஆயுதபூஜையையொட்டி பூக்களின் விலை கிடுகிடு உயர்வு - மழையால் பூக்களின் வரத்து குறைந்தது
’’தினசரி பூக்கள் சந்தையில் 10 டன் முதல் 20 டன் வரை பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது’’
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஹள்ளி, மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் 5000 ஏக்கருக்கு மேல் மலர் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு சாகுபடி செய்யப்படுகின்ற பூக்கள் சென்னை, கோவை, பெங்களூர், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் தருமபுரி பேருந்து நிலையத்தில் நடைபெறும் தினசரி பூக்கள் சந்தையில் 10 டன் முதல் 20 டன் வரை பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது. தொடர்ந்து இன்றும், நாளையும் ஆயுதபூஜை பண்டிகை என்பதால், பூக்களின் விலை ஒரு மடங்கு உயர்ந்து விற்பனையாகிறது. அதேபோல் தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூக்களின் தரம் குறைந்தும், எதிர்பார்த்த அளவில் பூக்கள் சந்தைக்கு வரத்து இல்லாமல் உள்ளது. இதனால் நேற்று முதல் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இன்றைய பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ சாமந்தி பூ 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் குண்டு மல்லி, ஊசி மல்லி கிலோ 600 ரூபாய்க்கும், சம்பங்கி 260 ரூபாய்க்கும், ஜாதி மல்லி 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் செண்டுமல்லி 40 ரூபாய்க்கும், கோழிக் கொண்டை பூ 40 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 200 ரூபாய்க்கும், ஒரு கட்டு ரோஜா 160 ரூபாய்க்கும் என இரண்டாவது நாளாக பூக்களின் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கொரோனா பரவலால் பூக்கள் விற்பனை கடந்த ஒன்றரை வருடமாக மந்தமாகவே இருந்து வந்தது. தற்போது ஒரு வருடத்திற்கு பிறகு ஆயுதபூஜை பண்டிகையையொட்டி பூக்களின் விலை உயர்ந்து விற்பனை யாகிறது. இந்த விலை உயர்வால், பூ வியாபாரிகள் மற்றும் பூக்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால் தருமபுரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பூக்களை பறிக்க முடியாமலும், பூக்களின் தரம் குறைந்தும், மார்கெட்டிற்கு வரத்து குறைவாக உள்ளது. மேலும் பண்டிகை நாட்களில் விலை ஏற்றம் கண்டுள்ள நிலையில், தொடர் மழை பெய்து வருவதால், பூக்கள் அறுவடை செய்ய முடியாமலும், தரம் குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தொடர்ந்து ஆயுத பூஜை பண்டிகைக்காக தருமபுரி பேருந்து நிலையத்தில் பூக்களை வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion