மேலும் அறிய
Advertisement
தருமபுரியில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
தருமபுரி மின்வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்.
தருமபுரி மின்வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தருமபுரி மின் பகிர்மான வட்டம் சார்பில் மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் ஜீவன் தலைமை வகித்தார். இந்த காத்திருப்பு போராட்டத்தில் துணை மின் நிலையங்கள் மற்றும் சில பணிகளை ஒப்பந்தம் விடும் முறையில் ஆட்கள் எடுப்பதை கைவிட வேண்டும். மேலும் மறுபகிர்வு முறையில் பணிகளை வழங்க வேண்டும். மேலும் மின்வாரிய பணியாளர்களின் பணிப்படியை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு மின் வாரிய ஊழியர்கள் ஒரு நாள் பணியை புறக்கணித்து விட்டு காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஏராளமான மின்வாரிய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றிய குழு கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து தர்ணாவில் ஈடுபட்ட ஒன்றிய கவுன்சிலர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுாி அடுத்த நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம், ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி தலைமையில் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக, திமுக மற்றும் பாமக ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட பல்வேறு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அறிக்கை முதலில் வாசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒன்றிய கவுன்சிலர்கள் வார்டுகளில் அடிப்படை தேவைகள் குறித்து தெரிவித்தனர். அப்பொழுது குடிநீர் மற்றும் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள சுமார் 1 கோடியே 74 லட்சம் நிதியை பாரபட்சமின்றி அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் முறையாக வழங்கிட வேண்டும் என கவுன்சிலர்கள் தெரிவித்தனர். அப்பொழுது நிதி ஒதுக்குவது குறித்து கவுன்சிலர்கள் சிலர் கூட்டத்தில் கேள்வி எழுப்பினர். அப்பொழுது ஒன்றியக்குழு தலைவர் மற்றும் அதிகாரிகள் உரிய பதில் சொல்லாததால், ஆத்திரமடைந்த, தி.மு.க பெண் ஒன்றியக்குழு துணைத் தலைவர் உள்ளிட்ட தி.மு.க ஒன்றிய கவுன்சிலர்கள், தே.மு.தி.க மற்றும் சுயோட்சை ஒன்றிய கவுன்சிலர்கள் என 7 பெண்கள் உட்பட 9 கவுன்சிலர்கள், நல்லம்பள்ளியில் இன்று நடந்த ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்திலிருந்து, வெளிநடப்பு செய்து, அலுவலக நுழைவு வாயில் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் ஒன்றிய குழு தலைவர், கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது அனைத்து ஊராட்சிகளுக்கும் நிதி ஒதுக்கி தருவதாக, வாக்குறுதி கொடுத்தனர். இதனை தொடர்ந்து கவுன்சிலர்கள் மோராட்டத்தை கைவிட்டு கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் நல்லம்பள்ளி ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion