மேலும் அறிய

Mettur Dam: 8,600 கன அடியில் இருந்து 6,600 கன அடியாக குறைந்தது, மேட்டூர் அணையின் நீர்வரத்து

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீராக 6,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரானது நேற்று அதிகரித்த நிலையில் இன்று சற்று குறைந்தது. நேற்று முன் தினம் அணைக்கு வினாடிக்கு 6,400 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 8,400 கன அடியாக அதிகரித்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 6,600 கன அடியாக குறைந்துள்ளது.

Mettur Dam: 8,600 கன அடியில் இருந்து 6,600 கன அடியாக குறைந்தது, மேட்டூர் அணையின் நீர்வரத்து

அணையின் நீர் மட்டம் 120 கன அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆகவும் உள்ளது. இந்த நிலையில் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 6,000 கன அடியில் இருந்து 8,000 கன அடியாக திறக்கப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டுவரும் நீர் 400 கன அடியாக இருந்த நிலையில் 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை , கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை சாகுபடிக்கான பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் சம்பா சாகுபடிக்காகவும் மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து நீரானது திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam: 8,600 கன அடியில் இருந்து 6,600 கன அடியாக குறைந்தது, மேட்டூர் அணையின் நீர்வரத்து

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.8 கன அடியாகவும் அணையின் நீர் இருப்பு 49.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4,943 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4,732 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 64.55 கன அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 19.22 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 855 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவதால் தமிழகத்தில் உள்ள 12 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது . 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Electricity Charge Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!
தேர்தல் ஓவர்.. தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!
மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்தார்களா யுவராஜ், ஹர்பஜன், ரெய்னா? போலீசில் புகார்!
மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்தார்களா யுவராஜ், ஹர்பஜன், ரெய்னா? போலீசில் புகார்!
"டிகிரியால் பயன் இல்ல.. பஞ்சர் கடை வையுங்க" மாணவர்களுக்கு பாஜக எம்எல்ஏ அட்வைஸ்!
"கல்வித்துறையில் காமராஜர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது" பிரதமர் மோடி புகழாரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Puri Jagannath temple Ratna Bhandar : பொக்கிஷ அறை திறப்பு! கொட்டிக் கிடக்கும் தங்கம்! மர்மம் விலகுமா?Arun IPS :  “ரௌடிகள் வீடுகளில் வேட்டைArmstrong Wife Appeal For CBI : ’’போலீஸ் வேணாம்; CBI தான் வேணும்’’களத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவிADMK BJP Alliance | டெல்லி பறக்கும் EPSமாறும் காட்சிகள்?புதுதெம்பில் ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Electricity Charge Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!
தேர்தல் ஓவர்.. தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!
மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்தார்களா யுவராஜ், ஹர்பஜன், ரெய்னா? போலீசில் புகார்!
மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்தார்களா யுவராஜ், ஹர்பஜன், ரெய்னா? போலீசில் புகார்!
"டிகிரியால் பயன் இல்ல.. பஞ்சர் கடை வையுங்க" மாணவர்களுக்கு பாஜக எம்எல்ஏ அட்வைஸ்!
"கல்வித்துறையில் காமராஜர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது" பிரதமர் மோடி புகழாரம்!
Watch Video: என்னம்மா இப்படி பண்றீங்களேமா! சாலையின் நடுவே ரீல்ஸ் செய்த பெண்ணால் கீழே விழுந்த வாகன ஓட்டி!
Watch Video: என்னம்மா இப்படி பண்றீங்களேமா! சாலையின் நடுவே ரீல்ஸ் செய்த பெண்ணால் கீழே விழுந்த வாகன ஓட்டி!
Thangalaan First Single : தங்கலான் முதல் பாடல்  ஜூலை 17-ஆம் தேதி வெளியாகும்.. ஜி.வி பிரகாஷ் இசையில் மினிக்கி ப்ரோமோ இதோ..
தங்கலான் முதல் பாடல் ஜூலை 17-ஆம் தேதி வெளியாகும்.. ஜி.வி பிரகாஷ் இசையில் மினிக்கி ப்ரோமோ இதோ..
Mohan G : கண்ட கண்ட கதைய எடுக்குறீங்க.. ஆயிரத்தில் ஒருவன் 2-ஆம் பாகத்தை வெளியிட சொன்ன மோகன் ஜி
கண்ட கண்ட கதைய எடுக்குறீங்க.. ஆயிரத்தில் ஒருவன் 2-ஆம் பாகத்தை வெளியிட சொன்ன மோகன் ஜி
Nicholai Sachdev : என் பெயருடன் வரலட்சுமி பெயர் சேர்க்கிறேன்.. நிக்கோலாய் சச்தேவ் பளிச்..
Nicholai Sachdev : என் பெயருடன் வரலட்சுமி பெயர் சேர்க்கிறேன்.. நிக்கோலாய் சச்தேவ் பளிச்..
Embed widget