மேலும் அறிய

Salem: ஆசனவாயிலில் செல்போன் பதுக்கிய கைதி - சேலம் சிறையில் பரபரப்பு

முக்கால் மணி நேரத்திற்கு பிறகு கேரிபேக்கில் சுற்றப்பட்ட சிறிய செல்போன் ஒன்று வெளியே வந்தது.

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் சேலம் மத்திய சிறை அமைந்துள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை வாரத்தில் 5 நாட்கள் உறவினர்கள் சந்திக்க வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. விசாரணை கைதிகளை 3 நாட்களும், தண்டனை கைதிகளை 2 நாட்களும் பார்க்க முடியும். அப்போது அவர்களுக்கு தேவையான பழங்கள், பிஸ்கெட்டுகளை உறவினர்கள் வழங்குவார்கள். அதேநேரத்தில் முன்பு கைதிகளை உறவினர்கள் சிறைக்குள் பார்த்தாலும் 5 அடி தூரத்தில் கம்பி வலைக்கு பின்னால் நின்று தான் பார்க்க முடியும். அதுவும் கைதிகள் பேசுவது உறவினர்களுக்கும், உறவினர்கள் பேசுவது கைதிகளுக்கும் கேட்காது. மனு பார்க்கும் இடத்தில் ஒரே சத்தமாக இருக்கும். இந்ததுயரத்தை போக்கும் வகையில் இன்டர்காம் வசதி செய்து கொடுக்கப்பட்டது. மனு பார்க்கும் இடத்தில் ஒருவரை ஒருவர் முகத்தை பார்த்துக்கொண்டே இன்டர்காம் மூலம் தெளிவாக பேசலாம். அதே போல வீடியோகால் மூலமும் குடும்பத்தினருடன் பேசும் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 

Salem: ஆசனவாயிலில் செல்போன் பதுக்கிய கைதி - சேலம் சிறையில் பரபரப்பு

இத்தனை வசதியையும் தாண்டி கைதிகள் ரகசியமாக செல்போன் பயன்படுத்துகிறார்கள் என்றால் அதிகாரிகளுக்கு தெரியாமல் இல்லை. சமீப காலமாக சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டு சிறைக்கு வரும் கைதிகள் ஆசன வாய் வழியாக செல்போனை கடத்தி வருவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். அதுபோன்ற சம்பவம் நேற்று சேலம் மத்திய சிறையில் நடந்துள்ளது. நேற்று காலை 6 மணியளவில் குமரகுரு என்ற கைதியின் நடவடிக்கை வித்தியாசமாக இருந்துள்ளது. இதனால் சிறை வார்டன்கள் அவரை கண்காணித்தனர். அவர் காலை தூக்கி தூக்கி வித்தியாசமாக நடந்தார். அவரை அலேக்காக தூக்கிகொண்டு சென்ற வார்டன்கள் ஜெயிலர் அறையில் வைத்து விசாரித்தனர். அப்போது அவர், ஆசனவாயில் செல்போனை வைத்திருப்பதாக தெரிவித்தார். இது குறித்து ஜெயிலர் மதிவாணனுக்கு தகவல் தெரிவித்து அவர் வரவழைக்கப்பட்டார். 

Salem: ஆசனவாயிலில் செல்போன் பதுக்கிய கைதி - சேலம் சிறையில் பரபரப்பு

அவர் முன்னிலையில் உள்ளே இருந்த செல்போனை எடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. கழிவறைக்கு தூக்கிச் சென்று எடுக்க வைத்தனர். முக்கால் மணி நேரத்திற்கு பிறகு கேரிபேக்கில் சுற்றப்பட்ட சிறிய செல் போன் ஒன்று வெளியே வந்தது. அதன்பிறகே அதிகாரிகள் பெருமூச்சு விட்டனர். 3 இஞ்ச் நீளமும், ஒன்றரை இஞ்ச் அகல மும் கொண்ட இந்த செல்போன் சீனா தயாரிப்பாகும் பெரும்பாலும் இது சென்னையில்தான் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. கேரி பேக்கில் சுற்றி வெளியே வந்த இந்த செல்போனை பத்திரமாக எடுத்து கழுவினர் தொடர் விசாரணையில் மதுரையை சேர்ந்த கொலை வழக்கு கைதி தன்னிடம் கொடுத்ததாகவும், அதனை பத்திரமாக ஆசனவாயில் வைக்குமாறு கூறியதாக அதிகாரிகளிடம் கைதி குமரகுரு தெரிவித்தார். இதையடுத்து கொலை வழக்கு கைதியை அதிகாரி ஒருவர் ரகசியமாக விசாரித்தார், இவ்வாறு செல்போன் பறிமுதல் செய்யப்படும்போது, அதனை கொடுத்தவருக்கும் தண்டனையாக ஒருமாதம் தனியறையில் அடைக்கப்படுவது வழக்கம். உறவினர்களையும் பார்க்க அனுமதி கிடையாது. இது சிறை விதியில் உள்ளது. ஆனால் கைதி குமரகுருவை மட்டும் தனியறையில் வைத்த அதிகாரிகள், கொலை வழக்கு கைதிக்கு தண்டனை ஏதும் வழங்கவில்லை. சேலம் மத்திய சிறையில் கைதி ஒருவர் ஆசனவாயிலில் செல்போன் பதுக்கிய சம்பவம் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

''Who is Ratheesh?'': யார் இந்த ரத்தீஷ்.? கேள்வி எழுப்பும் அதிமுக; சூடுபிடிக்கும் டாஸ்மாக் முறைகேடு விவாகரம்
யார் இந்த ரத்தீஷ்.? கேள்வி எழுப்பும் அதிமுக; சூடுபிடிக்கும் டாஸ்மாக் முறைகேடு விவாகரம்
Ramadoss Vs Anbumani Vs Sowmiya: அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
"நாச்சியப்பன் பாத்திரக் கடை கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட்" கலாய்த்த இபிஎஸ்
'Thug Life' Trailer on 17th: எகிறும் எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் ‘தக் லைஃப்‘ படத்தின் ட்ரெய்லர்
எகிறும் எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் ‘தக் லைஃப்‘ படத்தின் ட்ரெய்லர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan“அரிசி திருடி விக்குறீங்களா” ரவுண்டு கட்டிய இளைஞர் திணறிய ரேஷன் கடை ஊழியர்கள் Ration Shop ScamTirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
''Who is Ratheesh?'': யார் இந்த ரத்தீஷ்.? கேள்வி எழுப்பும் அதிமுக; சூடுபிடிக்கும் டாஸ்மாக் முறைகேடு விவாகரம்
யார் இந்த ரத்தீஷ்.? கேள்வி எழுப்பும் அதிமுக; சூடுபிடிக்கும் டாஸ்மாக் முறைகேடு விவாகரம்
Ramadoss Vs Anbumani Vs Sowmiya: அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
"நாச்சியப்பன் பாத்திரக் கடை கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட்" கலாய்த்த இபிஎஸ்
'Thug Life' Trailer on 17th: எகிறும் எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் ‘தக் லைஃப்‘ படத்தின் ட்ரெய்லர்
எகிறும் எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் ‘தக் லைஃப்‘ படத்தின் ட்ரெய்லர்
"காங்கிரஸ்க்கு எதிர்காலம் இல்ல.. இது, ராகுல் காந்தி உடன் இருப்பவர்களுக்கே தெரியும்" சிதம்பரம் நறுக்
Dindigul-Sabarimala Train: சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
Embed widget