மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர் வரத்து 55 கன அடியில் இருந்து 67 கன அடியாக உயர்வு

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 4,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடியாக குறைந்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 67 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 55 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 67 கன அடியாக அதிகரித்துள்ளது. 

மேட்டூர் அணையின் நீர் வரத்து 55 கன அடியில் இருந்து 67 கன அடியாக உயர்வு

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 62.36 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 26.47 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 4,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர் வரத்து 55 கன அடியில் இருந்து 67 கன அடியாக உயர்வு

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 89.46 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 15.61 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 223 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 746 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 50.02 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 11.20 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 49 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 950 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
Embed widget