மேலும் அறிய

வீட்டில் இருந்து கிளம்பிய குழந்தை சடலமாகத் திரும்பிய கொடுமை - வேன் சக்கரத்தில் சிக்கி பிஞ்சு உயிர் பலி

சேலத்தில் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3-ஆம் வகுப்பு மாணவி பரிதாப பலி - ஓட்டுநர் கைது.

ஏற்காட்டில் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3-ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்..

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இன்று காலை பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3-ஆம் வகுப்பு மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.ஏற்காடு மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் போதிய பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தினால், பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளைத் தனியார் வேன்களில் பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர். அந்த வகையில், வாழவந்தி பகுதியைச் சேர்ந்த மேகனா என்ற சிறுமி, இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்குத் தனியார் வேன் மூலம் சென்றுள்ளார்.

பள்ளியை வேன் சென்றடைந்ததும், ஓட்டுநர் மற்ற குழந்தைகளை கீழே இறக்கிவிட்டுள்ளார். பின்னர், வேனை கவனக்குறைவாகப் பின்னோக்கி எடுத்தபோது, எதிர்பாராத விதமாகச் சிறுமி மேகனா வேனின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்து அந்தப் பிஞ்சு குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. 

தகவலறிந்து விரைந்து வந்த ஏற்காடு போலீஸார், சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், மாணவி மீது வேனை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் ரங்கநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read| Annamalai: ”திமுகவின் நிதி நிர்வாக சீர்கேடுகள்” CM விஜய்க்கு வாழ்த்துடன் அட்வைஸ் தந்த அண்ணாமலை

இந்தக் கோர விபத்து ஏற்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலைக்கிராமங்களில் இருந்து கல்வி பயிலச் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Embed widget