மேலும் அறிய

Salem Leopard: மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்... வீட்டில் முடங்கிய சேலம் மக்கள்

மேட்டூர் அருகே கொளத்தூரில் கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்காத வனத்துறையினரை கண்டித்து விவசாயிகள் முற்றுகை.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பக்கநாடு, கோம்பைக்காடு பகுதியில் மாதையன் என்பவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். தினசரி காலை மேய்ச்சலுக்கு கால்நடைகளை அனுப்பி பின்னர் மாலை வீட்டின் அருகில் மாடுகளை கட்டி வைத்துவிட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த ஜூன் 10 ஆம் தேதி மாடுகளை கட்டி வைத்துவிட்டு உறங்கச் சென்றுள்ளார். மறுநாள் காலை மாதையன் எழுந்து பார்த்தபோது ஒரு மாடு காணாமல் போனதை கவனித்தார். உடனடியாக அருகில் தேடிய போது மாட்டை மர்ம விலங்கு வேட்டையாடியது தெரிய வந்தது. 

சிறுத்தை நடமாட்டம் உறுதி:

உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பெயரில் விரைந்து வந்த வனத்துறையினர் மாதையன் வீட்டின் அருகில் கேமராவை பொருத்திச் சென்றனர். மேலும் அங்கு ஒரு கூண்டு வைக்கப்பட்டது. இந்த நிலையில் மறுநாள் காலை வனத்துறையினர் வைக்கப்பட்ட கேமராவை ஆய்வு செய்தபோது சிறுத்தை அதே இடத்திற்கு மீண்டும் வந்தது தெரியவந்தது. இதன் மூலம் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். ஆனால் இரண்டு மாதங்கள் ஆகியும் தென்படாததால், சிறுத்தை மாற்று பாதையில் சென்று விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Salem Leopard: மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்... வீட்டில் முடங்கிய சேலம் மக்கள்

மீண்டும் சிறுத்தை நடமாட்டம்:

இந்த நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சேத்துகுழி, ஒட்டங்காடு, குழிக்காடு, புதுவேலமங்கலம் பகுதிகளில் விவசாயிகள் சிறுத்தையை பார்த்ததாக கூறியுள்ளனர். இந்த பகுதியில் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை வெளியேறி ஆடுகளை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. இதனால் விவசாயிகள் வீட்டை விட்டு மாலை நேரங்களில் வெளியே வராமல் அச்சமடைந்தனர். சிறுத்தை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு விட வேண்டும் என மேட்டூர் வனத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் சிறுத்தை புலியை பிடிக்க எந்த ஒரு நடவடிக்கையும் வனத்துறையினர் எடுக்கவில்லை.

பொதுமக்கள் போராட்டம்:

இதனை கண்டித்து நேற்று கொளத்தூர் வனத்துறை சோதனை சாவடி அலுவலகத்தை 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சிறுத்தை புலியை கூண்டு வைத்து பிடித்து வன பகுதிகள் விட நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததையடுத்து, விவசாயிகள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர், விவசாயிகள் சிறுத்தை பிடிக்க வேண்டும் எனவும் மனு அளித்தனர். இதனால் மேட்டூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

ஐந்து ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை:

இந்த நிலையில் மேட்டூர் அடுத்துள்ள வெள்ளக்கரட்டூர் பகுதியில் இன்று ஐந்து ஆடுகளை சிறுத்தை வேட்டையாடி சென்றுள்ளது. ஏற்கனவே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அச்சத்தில் இருந்து பொதுமக்கள், வனத்துறை சிறுத்தையை விரைந்து பிடிக்குமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர். தொடர்ந்து இரவு நேரங்களில் காட்டுப்பகுதி அருகாமையில் உள்ள கிராமங்களில் சிறுத்தை நடமாடி வருவதால் அங்கிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறையினர் எச்சரித்து வருகின்றனர். குழந்தைகளை பெற்றோர்கள் இரவு நேரத்தில் வெளியே அனுப்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Twitter Review : இந்த வருஷமும் ஏமாற்றம்தான்...பராசக்தி பார்த்த ரசிகர்கள் புலம்பல்..சோசியல் மீடியா விமர்சனம் இதோ
Parasakthi Twitter Review : இந்த வருஷமும் ஏமாற்றம்தான்...பராசக்தி பார்த்த ரசிகர்கள் புலம்பல்..சோசியல் மீடியா விமர்சனம் இதோ
Parasakthi: பராசக்தியை சீண்ட ஆளில்லை.. முதல் நாளே காத்து வாங்கும் தியேட்டர்கள்.. என்னாச்சு?
Parasakthi: பராசக்தியை சீண்ட ஆளில்லை.. முதல் நாளே காத்து வாங்கும் தியேட்டர்கள்.. என்னாச்சு?
Tilak Varma: டாடிஸ் ஹோம்..! உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர்? கடைசி நேர ட்விஸ்ட்
Tilak Varma: டாடிஸ் ஹோம்..! உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர்? கடைசி நேர ட்விஸ்ட்
ABP Premium

வீடியோ

Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Twitter Review : இந்த வருஷமும் ஏமாற்றம்தான்...பராசக்தி பார்த்த ரசிகர்கள் புலம்பல்..சோசியல் மீடியா விமர்சனம் இதோ
Parasakthi Twitter Review : இந்த வருஷமும் ஏமாற்றம்தான்...பராசக்தி பார்த்த ரசிகர்கள் புலம்பல்..சோசியல் மீடியா விமர்சனம் இதோ
Parasakthi: பராசக்தியை சீண்ட ஆளில்லை.. முதல் நாளே காத்து வாங்கும் தியேட்டர்கள்.. என்னாச்சு?
Parasakthi: பராசக்தியை சீண்ட ஆளில்லை.. முதல் நாளே காத்து வாங்கும் தியேட்டர்கள்.. என்னாச்சு?
Tilak Varma: டாடிஸ் ஹோம்..! உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர்? கடைசி நேர ட்விஸ்ட்
Tilak Varma: டாடிஸ் ஹோம்..! உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர்? கடைசி நேர ட்விஸ்ட்
Credit Score: க்ரெடிட் ஸ்கோரை ஏத்தனுமா? சிம்பிள் டிப்ஸ், என்ன செய்யலாம்? லோனை கொட்டிக் கொடுக்கும் வங்கிகள்
Credit Score: க்ரெடிட் ஸ்கோரை ஏத்தனுமா? சிம்பிள் டிப்ஸ், என்ன செய்யலாம்? லோனை கொட்டிக் கொடுக்கும் வங்கிகள்
Suzuki e-Access: சுசூகியின் மின்சார ஸ்கூட்டர் ரெடி.. யானை விலைக்கு சோளப்பொறி ரேஞ்சா? இந்த வண்டி தேறுமா?
Suzuki e-Access: சுசூகியின் மின்சார ஸ்கூட்டர் ரெடி.. யானை விலைக்கு சோளப்பொறி ரேஞ்சா? இந்த வண்டி தேறுமா?
Parasakthi : சிவகார்த்திகேயனின் பராசக்தி காட்சிகள் ரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்
Parasakthi : சிவகார்த்திகேயனின் பராசக்தி காட்சிகள் ரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்
இலவச லேப்டாப்பில் ஸ்டாலின் படத்தை அழித்தவர்களுக்கு செக்.! வாரன்டி இல்லை- மாணவர்களுக்கு ஷாக் தகவல்
இலவச லேப்டாப்பில் ஸ்டாலின் படத்தை அழித்தவர்களுக்கு செக்.! வாரன்டி இல்லை- மாணவர்களுக்கு ஷாக் தகவல்
Embed widget