மேலும் அறிய

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2,100 கனஅடி தண்ணீர் திறப்பு

Mettur Dam: நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 207 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 137 கன அடியாக குறைந்துள்ளது. 

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 126 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 207 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 137 கன அடியாக குறைந்துள்ளது. 

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2,100 கனஅடி தண்ணீர் திறப்பு

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 49.95 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 17.78 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,100 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2,100 கனஅடி தண்ணீர் திறப்பு

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.97 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.78 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 167 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4338 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 50.38 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 11.38 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 151 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
Embed widget