Mettur Dam: முழு கொள்ளளவை நெருங்கும் மேட்டூர் அணை... இன்றைய நீர் நிலவரம் இதுதான் !
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று காலை 18,220 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 113.69 அடியாக உயர்ந்துள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை, சம்பா, தாளடி பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் தண்ணீர் ஜனவரி 28ஆம் தேதி நிறுத்தப்படும். இடைப்பட்ட காலத்தில் மேட்டூர் அணையில் தண்ணீர் சேமிக்கப்படும். குடிநீர் தேவைக்காக மட்டும் சிறிது தண்ணீர் வெளியேற்றப்படும். மேட்டூர் அணை நீரை பயன்படுத்தி டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த 17.50 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதியைப் பெற்று வருகின்றன.
இந்த ஆண்டு மேட்டூர் அணை 230 நாட்களுக்கும் மேலாக 100 அடியைத் தாண்டி நீடித்து வந்தது. இதனால் ஜூன் 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையைத் திறந்து வைத்தார். முதலில் ஆறாயிரம் கன அடி திறக்கப்பட்ட தண்ணீர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது சுமார் 16 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு வருகிறது.

அதே சமயம் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா தமிழகத்திற்கு 9.19 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும். கர்நாடகாவில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை சிறப்பாக பெய்து வருகிறது. இதனால் கபினி, கேஆர்எஸ் அணைகளுக்கு காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் இருந்து அதிகளவு தண்னீர் வந்தது. கபினி அணை நிரம்பிய நிலையில், அதில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 25,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
மேட்டூர், கர்நாடகாவில் சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணையில் பாதுகாப்பு கருதி கடந்த, 17 முதல், வினாடிக்கு, 25,000 கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டது. தற்போது மழை குறைய, நேற்று கபினி நீர்வரத்து வினாடிக்கு, 13,024 கனஅடியாக சரிந்தது. அதற்கேற்ப நீர்திறப்பு வினாடிக்கு, 12,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. அணையிலிருந்து பிரதான கால்வாயில் நீர் திறப்பு 25,250 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் அதேபோல், கே.ஆர்.எஸ்., அணைக்கு, 19ல் வினாடிக்கு, 37,946 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று, 18,387 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து, 1,343 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் கபினியில் திறந்த நீர் வந்ததால், நேற்று முன்தினம் காலை, 8,218 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, இரவு, 16,341 கன அடி, நேற்று காலை, 18,220 கன அடி, மாலை, 22,469 கன அடியாக அதிகரித்தது. டெல்டா பாசனத்துக்கு, 16,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. திறப்பை விட வரத்து கூடுதலாக உள்ளதால், நேற்று முன்தினம், 113.57 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று காலை, 113.69 அடியாகவும், மாலை, 113.81 அடியாகவும் உயர்ந்தது.
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக உள்ள நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று காலை 18,220 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 113.69 அடியாக உயர்ந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் 2வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.





















