Mettur Dam: மேட்டூர் அணை இன்றைய நிலவரம் ! நீர்வரத்து நிலவரம் என்ன?
மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 35,000 கன அடியாக குறைக்கப்பட்டது

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 35,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 35,000 கன அடியாக குறைக்கப்பட்டது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு
வினாடிக்கு 35,500 கன அடியாக சரிந்தது. இதனையடுத்து மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 45,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 35,000கன அடியாக குறைக்கப்பட்டது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 120அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சி யாகவும் உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 35500கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22300கன அடி நீரும் உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 12700 கன அடி நீரும் மேல்மட்ட மதங்கள் வழியாக கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
ஒகேனக்கல் காவிரியாற்றில், 50,000 கன அடியாக நீர்வரத்து சரிவு
ஒகேனக்கல், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரியாற்றில், 50,000 கன அடியாக நீர்வரத்து சரிந்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே, அங்குள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால், அணைகளின் பாதுகாப்பு கருதி அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளுக்கு வரும் உபரி நீர் அப்படியே காவிரியாற்றில் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரிட்டி, தேன்கனிக்கோட்டை, தொட்டமஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் மழை குறைந்ததால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 65,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை, 6:00 மணிக்கு 50,000 கன அடியாக அதிகரித்து வந்தது. இதனால், அங்குள்ள மெயின் பால்ஸ், மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டியது. இதையெடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தர்மபுரி மாவட்ட நிர்வாகம் நேற்று, நான்காவது நாளாக காவிரியாற்றில் குளிக்க, பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.




















