மேலும் அறிய

சேலம் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு... எத்தனை வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்

சேலத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சேலத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டார். 

இதில், சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் 110879 ஆண் வாக்காளர்களும், 116930 பெண் வாக்காளர்களும், 9 இதர வாக்காளர்கள் என மொத்தம் 227818 உள்ளனர். ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 116206 ஆண் வாக்காளர்களும், 123441 பெண் வாக்காளர்களும், 18 இதர வாக்காளர்கள் என மொத்தம் 239665 உள்ளனர். ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் 138072 ஆண் வாக்காளர்களும், 144401 பெண் வாக்காளர்களும், 16 இதர வாக்காளர்கள் என மொத்தம் 282489 உள்ளனர். ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் 152359 ஆண் வாக்காளர்களும், 145595 பெண் வாக்காளர்களும், 13 இதர வாக்காளர்கள் என மொத்தம் 297967 உள்ளனர். மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் 138957 ஆண் வாக்காளர்களும், 135974 பெண் வாக்காளர்களும், 18 இதர வாக்காளர்கள் என மொத்தம் 274949 உள்ளனர். எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 145386 ஆண் வாக்காளர்களும், 141731 பெண் வாக்காளர்களும், 22 இதர வாக்காளர்கள் என மொத்தம் 287139 உள்ளனர். சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் 136507 ஆண் வாக்காளர்களும், 134101 பெண் வாக்காளர்களும், 19 இதர வாக்காளர்கள் என மொத்தம் 270627 உள்ளனர்.

சேலம் (மேற்கு) சட்டமன்ற தொகுதியில் 149998 ஆண் வாக்காளர்களும், 151596 பெண் வாக்காளர்களும், 77 இதர வாக்காளர்கள் என மொத்தம் 301671 உள்ளனர். சேலம் (வடக்கு) சட்டமன்ற தொகுதியில் 130988 ஆண் வாக்காளர்களும், 138058 பெண் வாக்காளர்களும், 47 இதர வாக்காளர்கள் என மொத்தம் 269093 உள்ளனர். சேலம் (தெற்கு) சட்டமன்ற தொகுதியில் 122235 ஆண் வாக்காளர்களும், 128154 பெண் வாக்காளர்களும், 57 இதர வாக்காளர்கள் என மொத்தம் 250446 உள்ளனர். வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் 130187 ஆண் வாக்காளர்களும், 129439 பெண் வாக்காளர்களும், 23 இதர வாக்காளர்கள் என மொத்தம் 259649 உள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 14,71,774 ஆண் வாக்காளர்களும், 14,89,420 பெண் வாக்காளர்களும், 319 இதர வாக்காளர்களும் என மொத்தம் 29,61,513 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

சேலம் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு...   எத்தனை வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்

தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ள வரும் 29ம் தேதி முதல் நவம்பர் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ள ஆட்சியர் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர் மற்றும் 18 வயது நிறைவடைந்தவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக நவம்பர் 16 மற்றும் 17 ம் தேதிகள், நவம்பர் 23 மற்றும் 24 ஆம் தேதிகள் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து ஜனவரி 6ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. 

மேலும் இணையதளம் மூலம் Voters.eci.gov.in மற்றும் www.elections.tn.gov.in என்ற முகவரியிலும் Voter helpline app என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் வாக்காளர் இணைப்பு முகாமினை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு உடனடியாக பரிசீலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
Embed widget