சேலத்தில் போலீசாரின் அலட்சியத்தால் முதியவரின் இறந்த உடலுடன் இரவு முழுவதும் நின்றிருந்த ஆம்புலன்ஸ்
முதியவரின் உடல் 15 மணி நேரத்திற்கும் மேலாக ஆம்புலன்சில் ஒரே இடத்தில் நிறுத்த வைக்கப்பட்டு இருந்தது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் சேர்ந்தவர் முதியவர் ராமு (72). அவர் சேலம் மாவட்டம் உடையாப்பட்டி பகுதியில் உள்ள அவரது சகோதரர் வீட்டில் இருந்து வந்துள்ளார். இங்கு கடந்த சில நாட்களாக சர்க்கரை நோய் பாதிப்பிற்கு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று கொண்டிருந்தபோது, அன்னதானப்பட்டி காந்தி சிலை அருகே மயங்கி சாலையில் விழுந்து உயிரிழந்தார்.
இந்த நிலையில் அன்னதானப்பட்டி காவல்துறையினர் நேற்று முதியவர் இறந்த சம்பவ இடத்திற்கு வருகை தந்து உடலை தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக உடலை வாகனத்தில் ஏற்றி சாலையின் அருகே நிறுத்திவிட்டு சென்றுள்ளனர்.
இது தொடர்பாக இறந்த முதியவரின் உறவினர்கள் நேற்று நள்ளிரவு தகவல் கிடைத்துள்ளது. அங்கிருந்து புறப்பட்டு சேலம் வருகை தந்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் இறந்த முதியவரின் உடலை அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள சவக்கிரங்கிற்கு அனுப்பி வைக்காமல் சாலையோரமாகவே நிறுத்திவிட்டு அலட்சியமாக சென்றுள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரவு முழுவதும் சாலையோரம் உயிரிழந்த ஒரு முதியோரின் உடல் வைத்து விட்டு சென்றதால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். காவல் துறையினரின் அலட்சியத்தால் முதியவரின் உடல் 15 மணி நேரத்திற்கும் மேலாக ஆம்புலன்சில் ஒரே இடத்தில் நிறுத்த வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அவரது உறவினர்களை வரவழைத்து உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு எடுத்துச் சென்றனர்.