மேலும் அறிய

"அடுத்துவரும் பாஜக ஆட்சியில் ராமராஜ்யம் அமைக்கப்படும்.. இது மகாத்மா காந்தியின் கனவு" - அண்ணாமலை பேச்சு..

இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்களிலும் அடுத்த சில வருடங்களில் 5ஜி, 6ஜி தொழில்நுட்பம் வந்து விடும்.

சேலம் மாவட்டம் மூன்று ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு கடந்த 5 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த 5 ஆம் தேதி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டை துவக்கி வைத்தார். மூன்று நாட்கள் நடைபெற்ற விவசாயிகளின் மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். இறுதி நாளான இன்று நிறைவு விழாவில் தமிழக பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியது, ”விவசாயிகளை மையப்படுத்தி 40 திட்டங்கள் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் 2 கோடி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். பிரதமரின் கிஸான் நிதி தமிழகத்தில் 46 லட்சம் விவசாயிகளுக்கு ஆன்லைன் முறையில் வழங்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு விவசாயிகளின் மீதான ஆர்வம் இதனால் வந்துள்ளது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை ரூ.10 லட்சம் வழங்கி ஊக்கப்படுத்தியதால் நீரா போன்ற பானங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இந்திய அளவில் விவசாயம் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளன.

விவசாயிகளை வெறும் வாக்கு வங்கிகளாக கருதியவர்கள் மத்தியில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற சிந்தனையை பிரதமர் மோடி உருவாக்கினார். கடன் தள்ளுபடிக்காக விவசாயிகள் காத்திருக்காமல் அவர்களின் விளைபொருட்களை சந்தைப்படுத்தும் வாய்ப்பினை பிரதமர் உருவாக்கினார்.

2016-ம் ஆண்டு நெல்லுக்கு குறைந்தபட்ச விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.1310 இருந்தது.தற்போது ஒரு குவிண்டாலுக்கு ரூ.2040 வழங்கப்படுகிறது. 56 சதவீதம் குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது. கிசான் கிரடிட் கார்டு மூலம் வருடத்திற்கு 3 சதவீத வட்டிக்கு விவசாயிகளுக்கு கடன் கிடைக்கிறது. 83 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கிசான் கிரடிட் கார்டு மூலம் கடன் பெற்று பயனடைந்து வருகின்றனர். அவினாசி-அத்திகடவு திட்டம் மத்திய அரசின் ஆயிரம் கோடி ரூபாய் பங்களிப்புடன் தொடங்கி நடைபெற்று 96 சதவீதம் பணிகள் முடிவுற்று விட்டது. ஆனால் கடந்த 15 மாதங்களாக திமுக ஆட்சியில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பைப் போட முடியாமல் திட்டம் அப்படியே நிற்கிறது. மாவட்டந்தோறும் முக்கிய விளைபொருட்களை விற்பனை சந்தைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கு ஒரு விவசாயப் பொருள் விற்பனையாகி வருகிறது. விவசாயப் பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்யும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்திய விவசாயிகளில் 8 ஆண்டுகளாக பட்டினிச் சாவு இல்லை.இந்தியாவின் விவசாய உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக பிரதமர் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறார். ஒவ்வொரு தாலுகா, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குளிர்பதனக் கிடங்கு இதன் மூலம் உருவாக்கப்படும். மேலும், ரயில்வே கிடங்கு, துறைமுகங்களில் பெரிய அளவிலான கிடங்குகள் உருவாக்கப்பட உள்ளது.

வெளிநாட்டில் இருந்து இந்திய சந்தைகளுக்கு வரும் கலிபோர்னியா ஆப்பிள் போல, மத்திய பிரதேசம் மற்றும் காஷ்மீரில் இருந்து அதே தரத்தில் பழங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

முந்தைய அரசுகள் சரியாக திட்டமிடாத நிலையில், வெளிநாட்டுப் பொருள்கள் இந்திய உணவுச் சந்தையை ஆக்கிரமித்து வருகிறது. அந்த நிலையை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. பெருங்காயம் இஸ்ரேலில் இருந்து ரூ.ஆயிரம் கோடி இறக்குமதி செய்து வந்த நிலை மாறியுள்ளது. விவசாயிகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்தது போல யாரும் செய்தது இல்லை. இயற்கை விவசாயம் இந்தியாவில் தொடங்கி விட்டது. சிக்கிமில் 100 சதவீதம் இயற்கை விவசாயம் உள்ளது.

இந்திய அளவில் 15 மாநிலங்கள் இயற்கை விவசாயத்தில் தீவிரமாக உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு இயற்கை விவசாயத்தில் ஆர்வம் இல்லாமல் உள்ளது. இயற்கை விவசாயத்தை இளைஞர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் தமிழக பாஜக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்பி உள்ளோம். விவசாயிகளின் தீர்மானங்களை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். நம்முடைய விவசாயப் பொருட்கள் மீது நாட்டமில்லாமல் உள்ளனர். இதை மாற்றியமைக்க உள்ளூரை நோக்கிச் செல்வோம் என்ற திட்டத்தை பிரதமர் முன்னெடுத்துள்ளார்.

இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்களிலும் அடுத்த சில வருடங்களில் 5ஜி, 6ஜி தொழில்நுட்பம் வந்து விடும். நகரங்களுக்கு இணையான அனைத்து வசதிகளும் கிராமங்களில் வந்து விடும் போது, நகரங்களுக்கு இடம்பெயர்வது தடுக்கப்படும். பிஎஸ்.என்எல் நிறுவனத்திற்காக ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்து வரும் பாஜக ஆட்சியில் ராமராஜ்யம் அமைக்கப்படும். இது மகாத்மா காந்தியின் கனவு. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்கிற ராமராஜ்யத்தினை மத்தியிலும் மாநிலத்திலும் அமைப்போம். உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும்போது விவசாயம் வளர்ச்சி அடையும்” என்று பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget