மேலும் அறிய
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் மண்பானையை அரசு வழங்கலாம் - தொழிலாளர்கள் கோரிக்கை
பொங்கல் வைக்க தொகுப்புடன் மண்பானையை வழங்கினால் பாரம்பரிய தொழிலை அழிவில் இருந்து காப்பாற்றவும் உரிய வருவாய் கிடைக்கும் என தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை.
அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் கொடுக்கப்படுகின்ற கரும்பு, உருண்டை வெள்ளத்தை அந்தந்த மாவட்டங்களில் கொள்முதல் செய்ய வேண்டும், பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைக்க தொகுப்புடன் மண்பானையை வழங்கினால் பாரம்பரிய தொழிலை அழிவில் இருந்து காப்பாற்றவும் உரிய வருவாய் கிடைக்கும் என தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தை முதல் நாள் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை தமிழர்கள் உள்ள இடங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெரும்பாலும் விவசாயிகளும், கால்நடை வளர்ப்போர் மட்டுமே இந்த பொங்கல் பண்டிகையை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழர் திருநாளை தமிழர்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதற்காக, கடந்த சில ஆண்டுகளாக அரசு நியாய விலை கடைகள் மூலம் புத்தாடை வழங்கி, பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டாக பொங்கல் வைக்க தேவையான செங்கரும்பு மற்றும் உருண்டை வெள்ளங்களையும் நியாய விலை கடைகள் மூலம் வழங்கி வருகிறது.
இந்நிலையில் பொங்கல் பரிசு தொகைப்புக்கு தேவையான புத்தாடைகளை நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இரண்டு மாதங்களுக்கு முன்பே நெசவாளர்கள் இடம் முன்பதிவு செய்து அரசு பெற்றுக் கொள்கிறது. ஆனால் கருப்பு வெளி மாவட்டங்களில் இருந்து ஏற்றுமதி செய்து, நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு முதல் உருண்டை வெள்ளம் தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உருண்டை வெள்ளத்தை வெளி மாநிலங்களில் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் செங்கரும்பு, உருண்டை வெல்லம் உற்பத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வருகிறது. இதனால் விவசாயிகளின் நலன் கருதி குடும்ப அட்டைகளுக்கு தேவையான செங்கரும்புகளை அந்தந்த மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடமே கொள்முதல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும். இதனால் அரசாங்கத்திற்கும் ஏற்றுமதி செய்யக்கூடிய பணம் மிச்சமாகும்.
மேலும் உருண்டை வெள்ளமும், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே உற்பத்தி குறைந்ததால் பாரம்பரிய தொழிலை விட்டு சிலர் வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் அந்தந்த மாவட்டத்திற்கு தேவையான உருண்டை வெள்ளத்தை கொள்முதல் செய்து கொண்டால், உருண்டை உள்ள உற்பத்தியாளர்களுக்கு போதிய வருவாய் கிடைக்கும், அதன் மூலம் தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பு பெருகும் என்பதால், உருண்டை வெள்ளத்தை அந்தந்த மாவட்டங்களிலேயே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகளும், உற்பத்தியாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தமிழக அரசு பொங்கல் பண்டிகை கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் அனைவருக்கும் பொங்கல் தொகுப்புகளை வழங்கி வருகிறது. ஆனால் அதனை பெற்றுக் கொள்ளும் மக்கள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைக்காமல், சில்வர் பாத்திரங்களில் பொங்கல் வைக்க வேண்டி நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் பொங்கல் என்றால் புத்தாடை அணிவது, புத்தரிசி, புது பானையில் பொங்கல் வைப்பது என்பதால் பொங்கல் தொகுப்போடு மண்பானையை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கும் பட்சத்தில் அழிந்து வரும் மண்பாண்ட தொழிலை பாதுகாக்க முடியும். மேலும் வருடத்தில் பத்து மாதங்கள் வேலை இல்லாமல், தவித்து வரும் மண்பாண்ட உற்பத்தியாளர்களுக்கும், போதிய வருவாய் கிடைக்கும் என்பதால், பொங்கல் தொகுப்போடு மண்பானையும் வழங்க வேண்டும் என மண்பாண்ட உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே பொங்கல் தொகுப்பில் வழங்கப்படுகின்ற செங்கரும்பினை, அந்தந்த மாவட்டங்களில் கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் கூடுதலாக மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தொகுப்புடன் மண்பானையை வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
விளையாட்டு
விளையாட்டு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion