மேலும் அறிய

அதிமுக கொண்டு வந்த மருத்துவ கல்லூரிகள்...! திமுக சொந்தம் கொண்டாடுவதா? - பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி

திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் சட்டம் ஒழுங்கு சீர்கேடு கொலை கொள்ளை போன்ற வழக்குகள் அதிகளவில் நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார்.

சேலம் மாநகர மாவட்ட கட்சி அலுவலகத்தில் உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் சேலம் மாநகர் உட்கட்சி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக உட்கட்சி தேர்தல் ஜனநாயக ரீதியில் நடைபெற்று வருகிறது. எவ்வித பிரச்சினையும் இன்றி தேர்தல் அமைதியாக நடைபெறுகிறது. தமிழகத்தில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமல்ல அடுத்து வரும் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறும் என்றார். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் இந்தியாவில் தமிழகம் முன்னோடியாக மருத்துவ கல்லூரிகள் துவக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் அதிக மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதற்கு திமுக சொந்தம் கொண்டாட முடியாது அதிமுகவுக்கு கிடைத்த வெற்றியினை திமுக சொந்தம் கொண்டாடுவது கண்டனத்துக்குரியது எனவும் கூறினார். மேலும், திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் சட்டம் ஒழுங்கு சீர்கேடு கொலை, கொள்ளை போன்ற வழக்குகள் அதிகளவில் நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார். வேதா இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் காணவில்லை என்று தீபா குற்றச்சாட்டுக்கு, பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறினார்.

அதிமுக கொண்டு வந்த மருத்துவ கல்லூரிகள்...! திமுக சொந்தம் கொண்டாடுவதா? - பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி

தமிழகம் முழுவதும் இரண்டு கட்டங்களாக அதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதற்கட்டமாக இன்று மற்றும் நாளையும் சேலம், கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு நடைபெற்று வருகிறது. இதில் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளை நிர்வாகிகள், பேரூராட்சி, நகராட்சி, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் ஆகியவற்றிற்கான தேர்தல் இன்று துவங்கி இரண்டு நாள்கள் நடைபெற உள்ளது. சேலம் மாவட்டத்திற்கு புறநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன் மற்றும் மாநகர பொறுப்பாளராக கழகத் தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக அமைப்புச் செயலாளர்கள் சிவசாமி, ஆகியோர் மாவட்ட பொறுப்பாளர்களிக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 37 ஒன்றியங்கள், 4 நகரங்கள், 33 பேரூராட்சி, 8 பகுதி ஆகியவற்றிற்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று தேர்தல் நடைபெறும் மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டலங்களில் உட்பட்ட 60 வட்டக் கழக நிர்வாகிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.  

சேலம் மாநகராட்சியில் ஒரு வட்டத்திற்கு 9 பதவிகள் மீதம் 540 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வட்டத்திற்கும் மூன்று தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து தகுதியான தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்வார்கள். இதில் ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வு செய்யப்பட்டவர்கள் இருந்தால் அவர்களுக்கு இடையே வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget