மேலும் அறிய

எடப்பாடி பழனிசாமி சொத்து விவரத்தை மறைத்த புகார் - விசாரணை நடத்த காவல்துறை முடிவு

வரும் 26 ஆம் தேதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது வேட்பு மனுவில் தனது சொத்து விவரங்களை மறைத்ததாக தேனி மாவட்டத்தை சேர்ந்த வழக்குரைஞர் மிலானி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான விசாரணை சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1ல் நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் 28 ஆம் தேதி வழக்கினை விசாரித்த நீதிபதி கலைவாணி இந்த வழக்கு தொடர்பாக 30 நாட்களுக்குள் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யுமாறு சேலம் மத்திய குற்ற பிரிவினருக்கு உத்தரவிட்டார். மேலும் பொதுநல வழக்கை தொடர்ந்த வழக்கறிஞர் மிலானிக்கு உரிய பாதுகாப்பை வழங்கவும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி சொத்து விவரத்தை மறைத்த புகார் - விசாரணை நடத்த காவல்துறை முடிவு

மேலும் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவு 125A(1), 125A(ii), 125A(iii) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்காம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி பழனிசாமி சொத்து விவரத்தை மறைத்த புகார் - விசாரணை நடத்த காவல்துறை முடிவு

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் சொத்து விவரங்கள், வருமான வரி கட்டியதற்கான ஆதாரங்கள், அவரது மனைவி வருமான வரி கட்டியதற்கான ஆதாரங்கள் உள்ளிட்டவைகளை காவல்துறையினர் திரட்டி வருகின்றனர். அதே நேரத்தில் புகார்தாரரான மிலானியை காவல்துறையினர் முதற்கட்டமாக விசாரித்துள்ளனர். மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வரும் 26 ஆம் தேதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். ஆனால் இதுகுறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக எனது பெயரில் எந்த சொத்துக்களும் நான் வாங்கவில்லை. இந்த வழக்கு வேண்டுமென்றே போடப்பட்ட வழக்கு என தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijayakanth:
Vijayakanth: "ஏழைகள் வாழ" கடவுளாக மாறிய விஜயகாந்த்! மக்கள் கடலில் மூழ்கிய கேப்டன் நினைவிடம்!
Manmohan Singh Death: இடமளிக்காத மத்திய அரசு..! மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு எங்கு? எப்போது நடைபெறும்..

Year Ender 2024 Zomato: இவ்வளவு சோம்பேறித்தனமா..! ஜொமேட்டோவில் குவிந்த டீ,காபி ஆர்டர்கள் - 2024ல் எந்த உணவு முதலிடம்?

Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijayakanth:
Vijayakanth: "ஏழைகள் வாழ" கடவுளாக மாறிய விஜயகாந்த்! மக்கள் கடலில் மூழ்கிய கேப்டன் நினைவிடம்!
Manmohan Singh Death: இடமளிக்காத மத்திய அரசு..! மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு எங்கு? எப்போது நடைபெறும்..
Manmohan Singh Death: இடமளிக்காத மத்திய அரசு..! மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு எங்கு? எப்போது நடைபெறும்..
Year Ender 2024 Zomato: இவ்வளவு சோம்பேறித்தனமா..! ஜொமேட்டோவில் குவிந்த டீ,காபி ஆர்டர்கள் - 2024ல் எந்த உணவு முதலிடம்?
Year Ender 2024 Zomato: இவ்வளவு சோம்பேறித்தனமா..! ஜொமேட்டோவில் குவிந்த டீ,காபி ஆர்டர்கள் - 2024ல் எந்த உணவு முதலிடம்?
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Breaking News LIVE: விஜயகாந்த் நினைவு நாள்; பேரணிக்கு அனுமதி மறுத்ததால் பெரும் பரபரப்பு

Rasipalan December 28: சிம்மத்திற்கு தாய்மாமன் ஆதரவு: கன்னியின் திறமை வெளிப்படும் - உங்க ராசி பலன்?

ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!

Bigg Boss Tamil 8 Eviction: குடும்பத்தினரை பார்த்த அதே ஜோரில் இந்த வாரம் வீட்டுக்கு நடையை கட்டும் போட்டியாளர் இவரா?

Embed widget