![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
காலாவதியான சுங்கச்சாவடிகள் பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை - மோட்டார் காங்கிரஸ் தலைவர்
இந்திய அளவில் உள்ள 937 சுங்கச்சாவடிகளில் 486 சுங்கச் சாவடிகளும், தமிழகத்தில் 27 சுங்கச் சாவடிகளும் காலாவதியானவை.
![காலாவதியான சுங்கச்சாவடிகள் பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை - மோட்டார் காங்கிரஸ் தலைவர் Motor Congress President Shanmugappa says Selling to many foreign companies in outdated Tollgates - TNN காலாவதியான சுங்கச்சாவடிகள் பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை - மோட்டார் காங்கிரஸ் தலைவர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/10/9cebe9847b097cd39d73c0c98175f25e1725951322493113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க 76 ஆவது மகா சபைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா புதிய நிர்வாகிகளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, இந்திய அளவில் உள்ள 937 சுங்கச்சாவடிகளில் 486 சுங்கச்சாவடிகளும், தமிழகத்தில் 27 சுங்கச்சாவடிகளும் காலாவதியானவை. காலாவதியான சுங்கச்சாவடிகளில் பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வந்துள்ளதாகவும் கூறினார்.
இதனால் 2036 ஆம் ஆண்டு வரை சுங்க கட்டணம் வசூல் செய்யலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆண்டுக்கு 5 முதல் 7 சதவகிதம் வரை சுங்க கட்டணம் உயர்ந்து கொண்டே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இருக்கும் லாரிகள் பத்து நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டால் வட மாநிலங்களில் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே நியாயமான போராட்டத்தை முன்னெடுக்க லாரி உரிமையாளர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் சண்முகப்பா கேட்டுக்கொண்டார்.
காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றாவிட்டாலும் 40 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும். பலமுறை வலியுறுத்தியும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்று தெரிவித்த சண்முகப்பா, இந்த விஷயத்தில் இனி மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லை என்றார்.
காலாவதியான சுங்கச்சாவடிகள் அனைத்தும் அகற்றப்படும் என சட்டமன்றத்தில் முதன் முதலில் தீர்மானம் நிறைவேற்றியவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் சுங்கச்சாவடிகள் மற்றும் டீசல் விலை நிர்ணய விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் லாரி உரிமையாளர்களுடன் சேர்ந்து செயல்பட்டால் தமிழகம் இந்திய அளவில் முன்மாதிரியான மாநிலமாக திகழும் என்றும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)