மேலும் அறிய

Mettur Dam: தொடர்ந்து உயரும் மேட்டூர் அணையின் நீர்வரத்து... இன்றைய நீர் நிலவரம் இதுதான்

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பருவமழை காலம் முடிவடைந்தது, அதன் காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்த வருகிறது. தமிழ்நாடு முழுவதும் குருவை சம்பா சாகுபடி அறுவடைக்கு தயாராக இருப்பதால், டெல்டா பாசத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 410 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 422 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 478 கன அடியாக அதிகரித்துள்ளது.

Mettur Dam: தொடர்ந்து உயரும் மேட்டூர் அணையின் நீர்வரத்து... இன்றைய நீர் நிலவரம் இதுதான்

நீர்மட்டம்:

அணையின் நீர்மட்டம் 110.58 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 79.23 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணை வரலாற்றில் ஒரே ஆண்டில் மூன்று முறை அணை நிரம்பியது இதுவே முதல் முறையாகும்.

இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெற்றது. மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெற்றது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது.

கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்ட வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam: தொடர்ந்து உயரும் மேட்டூர் அணையின் நீர்வரத்து... இன்றைய நீர் நிலவரம் இதுதான்

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.97 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.78 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 167 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4,338 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 50.38 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 11.38 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 151 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2,150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Vs Putin: “உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
“உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
EPS Vs Premalatha: எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
International Yoga Day 2025: உடல், மனம், ஆன்மாவிற்கு சமநிலையை வழங்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவின் சக்தி
உடல், மனம், ஆன்மாவிற்கு சமநிலையை வழங்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவின் சக்தி
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fight

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Putin: “உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
“உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
EPS Vs Premalatha: எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
International Yoga Day 2025: உடல், மனம், ஆன்மாவிற்கு சமநிலையை வழங்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவின் சக்தி
உடல், மனம், ஆன்மாவிற்கு சமநிலையை வழங்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவின் சக்தி
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
India Vs Pakistan: “நீங்க அத பண்ற வரைக்கும் பேச்சுவார்த்தையே கிடையாது“ அல்லாடும் பாகிஸ்தான் - இந்தியா சொன்னது என்ன?
“நீங்க அத பண்ற வரைக்கும் பேச்சுவார்த்தையே கிடையாது“ அல்லாடும் பாகிஸ்தான் - இந்தியா சொன்னது என்ன?
சோக்கர்ஸ் டாக்கை உடைக்குமா பெங்களூரு? மிரட்டுவாரா மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ்.. எகிறும் எதிர்பார்ப்பு
சோக்கர்ஸ் டாக்கை உடைக்குமா பெங்களூரு? மிரட்டுவாரா மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ்
"ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை" உறுதியாக சொன்ன பிரதமர் மோடி
RCB: கேப்டன் படிதார் இஸ் பேக்.. உள்ளே வந்த ஹேசில்வுட்! ஆனால் டிம் டேவிட்.. ஆர்சிபியில் இன்று நடப்பது என்ன?
RCB: கேப்டன் படிதார் இஸ் பேக்.. உள்ளே வந்த ஹேசில்வுட்! ஆனால் டிம் டேவிட்.. ஆர்சிபியில் இன்று நடப்பது என்ன?
Embed widget