மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர்வரத்து சரிவு... வினாடிக்கு எவ்வளவு குறைந்தது?

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 5,300 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பருவமழை காலம் என்பதால், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வருவதால் டெல்டா பாசத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 745 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 674 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 555 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து சரிவு... வினாடிக்கு எவ்வளவு குறைந்தது?

நீர்மட்டம்:

அணையின் நீர்மட்டம் 114.74 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 85.32 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. மேட்டூர் அணை வரலாற்றில் ஒரே ஆண்டில் மூன்று முறை அணை நிரம்பியது இதுவே முதல் முறையாகும்.

இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது.

கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 5,300 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து சரிவு... வினாடிக்கு எவ்வளவு குறைந்தது?

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.97 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.78 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 167 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4,338 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 50.38 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 11.38 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 151 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2,150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 RCB vs GT: சீறிய சிராஜ்! காப்பாற்றிய லிவிங்ஸ்டன், ஜிதேஷ், டேவிட்! 170 ரன்களை அடிக்குமா குஜராத்?
IPL 2025 RCB vs GT: சீறிய சிராஜ்! காப்பாற்றிய லிவிங்ஸ்டன், ஜிதேஷ், டேவிட்! 170 ரன்களை அடிக்குமா குஜராத்?
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
Stalin Vs EPS: ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தங்கை ஆணவக்கொலை?அண்ணன் செய்த கொடூரம் நாடகம் ஆடிய குடும்பம்BJP Posters In Ramanathapuram: ”அதிமுக கூட்டணி வேண்டாம் அண்ணாமலையே போதும்” பாஜக போஸ்டரால் பரபரப்புAnnamalai BJP: தேசிய அரசியலில் அண்ணாமலை.. மாநில அரசியலுக்கு ஆப்பு? சீனியர்ஸ் பக்கா ஸ்கெட்ச்Irfan Controversy | சமாதான கொடி தூக்கிய இர்பான் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்” ESCAPE ஆகுறது வேலையா”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 RCB vs GT: சீறிய சிராஜ்! காப்பாற்றிய லிவிங்ஸ்டன், ஜிதேஷ், டேவிட்! 170 ரன்களை அடிக்குமா குஜராத்?
IPL 2025 RCB vs GT: சீறிய சிராஜ்! காப்பாற்றிய லிவிங்ஸ்டன், ஜிதேஷ், டேவிட்! 170 ரன்களை அடிக்குமா குஜராத்?
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
Stalin Vs EPS: ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
BJP TN New Leader: பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
கூப்பிட்றப்ப எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணனும்.. இன்ஸ்டா பிரபலத்துக்கு நிகழ்ந்த கொடுமையை பாருங்க
கூப்பிட்றப்ப எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணனும்.. இன்ஸ்டா பிரபலத்துக்கு நிகழ்ந்த கொடுமையை பாருங்க
TNPSC: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; 3 மாதங்களில் 7557 பேர் செலக்ட்- ஜெட் வேகத்தில் செய்த சீர்திருத்தங்கள் தெரியுமா?
TNPSC: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; 3 மாதங்களில் 7557 பேர் செலக்ட்- ஜெட் வேகத்தில் செய்த சீர்திருத்தங்கள் தெரியுமா?
Irfan Controversy: மனுஷனாவும் இல்ல..! இஸ்லாத்தையும் மதிக்கில - காசுக்காக அலையும் இர்ஃபான் - வேடிக்கை பார்க்கும் அரசு
Irfan Controversy: மனுஷனாவும் இல்ல..! இஸ்லாத்தையும் மதிக்கில - காசுக்காக அலையும் இர்ஃபான் - வேடிக்கை பார்க்கும் அரசு
Embed widget