மேலும் அறிய

Mettur Dam: ஜூன் மாதம் 12ஆம் தேதி: டெல்டா பாசனத்திற்காக 90 வது ஆண்டாக திறக்கப்படும் மேட்டூர் அணை!

டெல்டா பாசனத்திற்காக 90 வது ஆண்டாக மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் தாயாக விளங்கும் மேட்டூர் அணை ஜூன் மாதம் 12ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்காக 90 வது ஆண்டாக மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். மேட்டூர் அணை இந்த ஆண்டு இதுவரை 100 அடிக்கு கீழ் நீர்மட்டமானது செல்லாமல் உள்ளது. 

1942 முதல் 1945 ஆம் ஆண்டு வரை மே மொத்தத்தில் திறக்கப்பட்ட மேட்டூர் அணை, இந்திய சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு 77 ஆண்டுகளுக்குப் பின்னர், மே மாதத்தில் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. வழக்கமாக ஜூன் மாதம் 12 ஆம் தேதி குறுவை சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். இதுவரை ஜூன் மாதத்தில் 12 ஆம் தேதிக்கு முன்பாக 10 முறையும், நீர் இருப்பு குறைவாக இருந்த காரணத்தினால் ஜூன் மாதம் 12 ஆம் தேதிக்கு பின்னர் 60 முறையும், ஜூன் மாதம் 12 ஆம் தேதிக்கு முன்பாக 18 முறைகள் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ஜூன் மாதம் 12 ஆம் தேதி 61 வது முறை திறக்கப்பட திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து உயர்ந்து வந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்து 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிகரித்தாலும், அணையிலிருந்து குறைவான அளவு நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்த ஆண்டு 100 அடிக்கும் அதிகமான அளவில் நீடித்து வந்தது.

Mettur Dam: ஜூன் மாதம் 12ஆம் தேதி: டெல்டா பாசனத்திற்காக 90 வது ஆண்டாக திறக்கப்படும் மேட்டூர் அணை!

இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்வரத்து 4,176 கன அடியாகவும், நீர்மட்டம் 103.68 அடியாக உள்ளது. நீர் இருப்பு 69.69 டி.எம்.சியாக உள்ளது. டெல்டா பாசனத்திற்காக காவிரியில் ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படுவதால் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் மூலம் 16.5 லட்சம் ஏக்கர் வசனம் பெறவுள்ளது. குறுவை, சம்பா சாகுபடிக்காக 4 லட்சம் ஏக்கர் இந்த ஆண்டு பாசன வசதி பெற உள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

தலைப்பு செய்திகள்

சொந்த ஊரில் எடப்பாடி பழனிசாமி திடீர் தீவிர ஆலோசனை... சட்டமன்றத்தில் பேசப்போவது என்ன?
சொந்த ஊரில் எடப்பாடி பழனிசாமி திடீர் தீவிர ஆலோசனை... சட்டமன்றத்தில் பேசப்போவது என்ன?
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Embed widget