மேலும் அறிய

ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?

ஏற்காடு மலைவாழ் கிராமங்களில் இருந்து நீட் தேர்வில் முதல்முறையாக தேர்ச்சி பெற்ற மலைவாழ் மாணவி நிவேதா -  கனவு நிறைவேற அரசு உதவிட கோரிக்கை.

ஏற்காடு மலைவாழ் கிராமங்களில் இருந்து முதல்முறையாக நீட் தேர்வில் குண்டூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி நிவேதா தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். 

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த மாணவி நிவேதா. சேலம் மாவட்ட சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் 65 மலை கிராமங்கள் உள்ளன. ஏற்காடு பிரதான பகுதியில் இருந்து 7 கிலோமீட்டர் பள்ளத்தாக்கில் உள்ளது எழில் கொஞ்சும் குண்டூர் கிராமம். சுற்றுலாப் பயணிகளின் கண்ணைக் கவரும் பசுமைப் போர்வை போர்த்தி நிற்கும் இந்த மலை கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

பெரிய தொழில்வாய்ப்பு இல்லாத நிலையில், காபி தோட்டத் தொழிலுக்கும் கூலி வேலைக்கும் செல்வதால் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நடத்தும் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு 5-ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்கூடம் உள்ளது.  6-ம் வகுப்பு முதல் கல்வி கற்க 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஏற்காட்டிற்கு நடந்து சென்றுதான் படிக்க வேண்டும் என்பதால் பெண் குழந்தைகளின் கல்வி பயணம் சிறுவயதிலேயே முடிவுக்கு வந்து விடுகிறது. இதுபோன்ற பல தடைகளைத் தாண்டி ஏழுமலை-மணிமேகலை தம்பதியின் மகள் நிவேதா நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளார். நீட் தேர்வு நடைமுறை தொடங்கப்பட்ட பின்னர் ஏற்காடு மலைவாழ் கிராமங்களில் இதுவரை யாரும் தேர்ச்சி பெறாத நிலையில், 245 மதிப்பெண்கள் பெற்றும் மாணவி நிவேதா முதல்முறையாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் கூறுகையில், ‘மாணவி நிவேதா 10-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு அரசு உதவி பெறும் பள்ளியிலும் பயின்றுள்ளார். இதனால் அரசுப்பள்ளி மாணவியருக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு பிரிவில் மாணவி நிவேதா இடம் பெறவில்லை. அரசு கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தாலும் கூலித் தொழிலாளர்களான தங்களால் மருத்துவக் கல்வி பயில வைக்கும் அளவிற்கு பொருளாதார சூழல் இல்லாததால் அரசு உதவி செய்ய வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?

மாணவி நிவேதா கூறுகையில், “மழையின்போது ஒழுகாத வீடில்லை. அகலமான சாலையில் வீட்டிற்கு வாகனத்தில் போய் இறங்கக் கூடிய வாய்ப்பில்லை. நினைத்ததை நொடிப்பொழுதில் பதிவிறக்கம் செய்யக் கூடிய இணையதள வசதியில்லை. நிறைய இல்லைதான். ஆனால் மலைவாழ் மக்களுக்கான சிறப்பு மருத்துவராக வேண்டும் என்ற இலக்கு” என்றார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget