பாரம் தாங்காமல் சாலையில் கவிழ்ந்த லாரி - சேலத்தில் பரபரப்பு: அதிர்ச்சி வீடியோ
விபத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பழைய உடையாம்பட்டி பகுதியை சேர்ந்த கணேசன். இவர் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். பொள்ளாச்சி, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேங்காய் கொள்முதல் செய்து வெளி மாவட்டங்களுக்கு தேங்காய் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள தும்பல் பகுதியில் உள்ள விவசாயிகளிடம் தேங்காய்களை கொள்முதல் செய்து ஏற்றிக்கொண்டு ஈச்சர் லாரியை பழைய உடையம்பட்டியைச் சேர்ந்த ஓட்டுனர் ராஜேந்திரன் ஒட்டி வந்தார்.
சேலம்: பாரம் தாங்காமல் கவிழ்ந்த லாரிhttps://t.co/wupaoCzH82 | #accident #viralpost #TamilNews pic.twitter.com/8rmYrvc5xI
— ABP Nadu (@abpnadu) January 27, 2024
அப்போது ஈச்சர் லாரியின் பின்பகுதியில் இரண்டு பேர் அமர்ந்திருந்த நிலையில் அதிக பாரம் ஏற்றிக் கொண்டு வந்த ஈச்சர்லாரி சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை கொத்தாம்பாடி பகுதியில் விபத்துக்களை தடுப்பதற்காக நெடுஞ்சாலைத் துறையினர் சாலையில் தடுப்புகள் அமைத்துள்ளனர். இதில் அதிகளவில் தேங்காய் லோடு ஏற்றி வந்தும் அதிவேகமாகவும் வந்த ஈச்சர் லாரி தடுப்பு பகுதி வளைவில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே ஈச்சர் லாரி பின்னால் உள்ள கேவின் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஈச்சர் லாரியின் பின்னால் அமர்ந்து வந்த பெண் உட்பட இரண்டு பேருக்கு லேசான காயத்துடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்கள். சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமீபகாலமாக இது போன்ற விபத்துக்கள் அதிகம் நடைபெற்று வருகிறது. விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.