மேலும் அறிய

சேலத்தில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி வீட்டில் குண்டு வீச்சு - பாஜக குழு ஆய்வு

திமுக அரசு வந்தாலே மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு சம்பவம் திமுக ஆட்சியில் தான் நடைபெற்றது.

சேலம் மாநகர் அம்மாபேட்டை பரமக்குடி நன்னுசாமி தெருவில் வசித்து வருபவர் ராஜன். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சேலம் நகர மண்டல தலைவர் பொறுப்பில் உள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை ஒரு மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் ராஜன் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை பற்றவைத்து வீசி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பாட்டில் சரியாக பற்றாத காரணத்தால் தீயினால் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனிடையே இந்த சம்பவத்தை கண்ட எதிர்வீட்டு நபர் தியாகராஜன் என்பவர் ராஜனுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் ராஜன் வீட்டிற்கு வந்தனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் மாடசாமி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜன் வீட்டில் நேற்று அதிகாலை மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலில் நெருப்பு பற்றி வீட்டின் முன்பு வீசியது தொடர்பாக ஏழு பேரை அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் காதர் உசேன் மற்றும் சையத் அலி ஆகிய இருவர் மண்ணெண்ணெய் குண்டு வீசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 

சேலத்தில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி வீட்டில் குண்டு வீச்சு - பாஜக குழு ஆய்வு

இந்த நிலையில் தமிழக பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு குழு அமைக்கப்பட்டு குண்டு வீசப்பட்ட வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உத்திரவிடப்பட்டது. இதன் அடிப்படையில் இன்று சேலத்தில் நேற்று ஆர்எஸ்எஸ் நிர்வாகி ராஜன் என்பவரது வீட்டில் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில் வீசிய சம்பவம் குறித்து, மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி தலைமையில், பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி மற்றும் மாநில சிறுபான்மை தலைவி டெய்ஸி ஆகியோர் ராஜன் இல்லத்தில் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர்.

சேலத்தில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி வீட்டில் குண்டு வீச்சு - பாஜக குழு ஆய்வு

ஆய்விற்கு பின்னர் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி செய்திகளை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, பாதுகாப்பற்ற சூழ்நிலை தமிழகத்தில் இருந்து வருகிறது. எந்த விரோதமும், எந்த காரணமும் இல்லாத குடும்பத்தின் மீது தாக்குதல் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறவும், எதற்காக இந்த தாக்குதல் நடைபெற்றது என தெரிந்து கொள்வதற்காக குழு அமைத்த மாநிலத் தலைவர் சந்திக்க சொல்லியிருந்தார். அதற்காக நாங்கள் இங்கு வந்துள்ளோம். தாக்குதல் நடத்தப்பட்ட குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்போம். எந்த காரணத்திற்காக இந்த தாக்குதல் நடைபெற்றது என தெரியவில்லை.

அவர்களுக்கு யாரும் பகையாளி இல்லை. அமைதியாக இருந்த குடும்பத்தின் மீது என் தாக்குதல் நடத்தப்பட்டதை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் இந்த ஆய்வு குறித்து பாஜக தலைமைக்கு அறிக்கை சமர்ப்பிப்போம் அதன்படி தலைமை நடவடிக்கை எடுக்கும் என்றார். தமிழகம் முழுவதும் நடக்கும் தாக்குதல் எந்தவித முன் பகையும் இன்றி நடத்தப்படுகிறது. தனிப்பட்ட கோபத்தில் யார் மீதும் தாக்குதல் நடத்தப்படவில்லை. ஏதோ ஒரு காரியத்திற்காக இந்த தாக்குதலை சமூகவிரோதிகள் செய்து வருகின்றனர். திமுக அரசு வந்தாலே மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு சம்பவம் திமுக ஆட்சியில் தான் நடைபெற்றது. இது போன்ற சம்பவங்கள் திமுக ஆட்சியில் நடப்பது அனைவரும் அறிந்தது. அரசு அனைத்து ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget