மேலும் அறிய

Karthigai Deepam 2024: கார்த்திகை தீப விழா - பூம்புகார் விற்பனை நிலையத்தில் தொடங்கியது தீபத் திருவிழா

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 'தீப திருவிழா' என்ற பெயரில் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை 27.11.2024 முதல் 14.12.2024 வரை நடைபெற உள்ளது.

கார்த்திகை தீபக் திருவிழா வருகின்ற 13-ஆம் தேதி தமிழக முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழகமான பூம்புகார் விற்பனை நிலையத்தில் 'தீப திருவிழா' என்ற பெயரில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விளக்குகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தி வருகிறது. சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழகம் பூம்புகார் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இதில் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு இவைகளை கைவினை கலைகள் மூலம் உருவாக்கப்படும் கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரமாகவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அவர்களுக்கு பல விருதுகளை கொடுத்து ஊக்குவித்து மற்றும் கைவினை கலைகள் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில் செயல்பட்டு வருகிறது. 

Karthigai Deepam 2024: கார்த்திகை தீப விழா - பூம்புகார் விற்பனை நிலையத்தில் தொடங்கியது தீபத் திருவிழா

கைவினைக் கலைஞர்கள், பொது மக்களும் பயன்பெறும் வகையில் பண்டிகை காலங்களிலும் மற்றும் விழா காலங்களிலும் பல கண்காட்சிகளை சேலத்தில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையம் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 'தீப திருவிழா' என்ற பெயரில் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை 27.11.2024 முதல் 14.12.2024 வரை நடைபெற உள்ளது. இக்கண்காட்சியினை சேலம் மாநகர துணை காவல் ஆணையாளர் பிருந்தா தொடக்கி வைத்தார்.

இக்கண்காட்சியில் சிறப்பு அம்சமாக கும்பகோணம், நாச்சியார் கோயில், மதுரை, வாகை குளம் ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்ட 1/2 அடி முதல் 6 அடி வரையில் அன்னம் மற்றும் பிரபை விளக்குகள், 1/2 அடி முதல் 3 அடி வரையில் மலபார் விளக்குகள் ஆலயங்களில் பயன்படுத்தக்கூடிய வாசமாலை, தூண்டா மணி விளக்குகள், அகல் விளக்குகள், மங்கள தீபம், பாலாடை விளக்குகள், விநாயகர் விளக்குகள், கிளை விளக்குகள், ரத தீபம், கொடி தீபம், அடுக்கு தீபம், பஞ்சாட்சர தீபம், திருமலை அன்னம் மற்றும் சங்கு சக்கர தீபம், லட்சுமி, பாலாஜி, தேவி, விஷ்ணு, முருகர், நவகிரசு தீபங்கள், அஷ்டோத்ர தீபம், பிரபை விளக்குகள், கிளி விளக்குகள், தாமரை விளக்குகள், அஷ்டலட்சுமி விளக்குகள், பிரதோஷ விளக்குகள், நாக தீபம், குபேர தீபம், நந்தா தீபம். கற்பகவிருட்சம் விளக்கு, லட்சுமி உருவம் கொண்ட உருளி, பலவித வடிவங்களில் உருளி, தென்கலை நாம விளக்கு, அருணாச்சலேஸ்வரர் விளக்கு, டெரகோட்டா அகல் மண் விளக்குகள், வர்ணம் பூசப்பட்ட மண் விளக்குகள் மற்றும் பலவித வடிவங்களில் விளக்குகள் போன்ற வகையில் விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி பூஜை பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

Karthigai Deepam 2024: கார்த்திகை தீப விழா - பூம்புகார் விற்பனை நிலையத்தில் தொடங்கியது தீபத் திருவிழா

கடந்த ஆண்டு நடைபெற்ற தீபத் திருவிழாவில் ரூபாய் 3.25 லட்சத்திற்கு விளக்கங்கள் எத்தனை ஆளாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு கண்காட்சியில் சுமார் ரூபாய். 3 இலட்சம் வரை விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ. 3 முதல் ரூ. 55,000 விலை வரை 500 வகையான விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் 10% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

இக்கண்காட்சி குறித்து மேலாளர் நரேந்திர போஸ் கூறுகையில், இக்கண்காட்சியில் காட்சிக்கு மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பல்வேறு வகையான விளக்குகள் மற்றும் பூஜை பொருட்களை சேலம் மாநகர மக்கள் வாங்கி தங்கள் கார்த்திகை தீப விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடவும், மேலும் இந்த விளக்குகளை உற்பத்தி செய்யும் கைவினை கலைஞர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: எப்போது உருவாகிறது ஃபெங்கல் புயல்?
Fengal Cyclone LIVE: எப்போது உருவாகிறது ஃபெங்கல் புயல்?
"மாவீரம் போற்றுதும் மாவீரம் போற்றுதும்" மாவீரர் நாள்.. நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: எப்போது உருவாகிறது ஃபெங்கல் புயல்?
Fengal Cyclone LIVE: எப்போது உருவாகிறது ஃபெங்கல் புயல்?
"மாவீரம் போற்றுதும் மாவீரம் போற்றுதும்" மாவீரர் நாள்.. நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget