மேலும் அறிய
அப்படியிருந்தால் அண்ணாமலை சொல்லுவார்.. கண்டனம் தெரிவித்த கே.பாலகிருஷ்ணன்..
செம்மர கடத்தலில் ஈடுபடும் பெரிய வியாபாரிகள், அரசியல்வாதிகள், பினாமிகள் யார் என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பேசினார்.
பாஜக அடிமை ஆட்சியில் இருந்த காவல்துறைபோல் இருந்தால், காவல்துறை செயல்பாடு நன்றாக இருக்கிறது என அண்ணாமலை சொல்லுவார் என அரூரில் கே.பாலகிருஷ்ணன் பேசியுள்ளார்
தருமபுரி மாவட்டம் அரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 33-வது தருமபுரி மாவட்ட மாநாடு இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அரூர் பேருந்து நிலையத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது பேசிய கே.பாலகிருஷ்ணன், "தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே அதிமுக ஆட்சியில் இருந்தபோது இருந்த காவல்துறையை போல் இருந்தால் காவல்துறை நன்றாக திறமையாக செயல்படுகிறது என்று சொல்வார். எஸ் வி சேகர் என்ன வேண்டுமானாலும் பேசுவார், நம்ம எச்.ராஜா, நீதிபதிகளை கூட கேவலமாக திட்டுவார், பெண்களைக் கேவலப்படுத்துகிற வார்த்தைகளை கூட சொல்வார்கள். ஆனால் அப்பொழுது இருந்த காவல்துறை அதையெல்லாம் கண்டுகொள்ளாது. ஏனென்றால் அது பிஜேபியின் அடிமை ஆட்சியில் இருந்த காவல்துறை. அதே மாதிரி இந்த காவல் துறையும் இருக்க வேண்டும் என்று சொன்னால் முடியாது என்று டிஜிபி சொல்கிறார். சட்ட வரம்புகளை மீறி பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று டிஜிபி சொல்கிறார். அதில் என்ன தவறு இருக்கிறது. அதை வேண்டுமென்றால் நீதிமன்றம் சென்று சந்திக்கலாமே. அதை விடுத்து காவல் துறை செயல்படவில்லை, அவர் கையில் இல்லை என்று சொல்வது, வேறு யார் கையில் உள்ளது. ஒருவேளை காவல் துறை அண்ணாமலை கையில் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறாரோ என்று தெரியவில்லை.
ஏற்கனவே அதிமுக ஆட்சியில் ஊழல் தலைவிரித்து ஆடியது என்பது எல்லாருக்குமே தெரியும். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என எல்லோரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்கள். யார் தவறு செய்து இருக்கிறார்களோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது சரிதானே அதை எப்படி பழிவாங்கும் நோக்கம் என்று சொல்ல முடியும். சோதனை நடத்தப்படுகிறது, வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அதனை நீதிமன்றத்தில் சந்தித்து விடுதலையாகி வரவேண்டும். தவறு நடந்து இருக்கிறதா இல்லையா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்யும். அதற்குள்ளாக இது பழிவாங்கும் நோக்கம் என்று எப்படி சொல்ல முடியும். அப்படி சொல்ல முடியாது.
மத்திய அரசின் தனியார் மையமாக்கல் கொள்கையால் தான் பொட்டாஷ் விலை ஏற்றத்திற்கு காரணம். எல்லா பொருட்களின் விலையும் ஏற்றம் கண்டிருக்கிறது. இரும்பு, அலுமினியம், பித்தளை விலை ஏற்றம் கண்டுள்ளது. இது ஆயிரக்கணக்கான சிறு குறு தொழிற்சாலைக்கு தேவையான பொருட்கள். இது எல்லாமே நூறு மடங்கு, இருநூறு மடங்கு, 300 மடங்கு என காப்பர் 400% விலை ஏற்றம் கண்டுள்ளது. அதேபோல பொட்டாஷை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். அரசாங்கம் இறக்குமதி செய்து விற்பனை செய்யாததால் தனியார் விற்கபடுவதால் இந்த கொள்ளை நடைபெறுகிறது. ஒன்றிய அரசின் தனியார் மையமாக்கல் என்ற தவிர்க்க முடியாத கொள்கைதான் பொட்டாஷ் விலை உட்பட அனைத்தும் விலை ஏற்றம் அடைவதற்கான முக்கிய காரணம்.
தமிழகத்தில் போதிய வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால், இன்றைய இளைஞர்கள் சமூக விரோதிகளின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். இதனால் செம்மரம் வெட்டுதல் போன்ற தொழிலுக்கு சென்று உயிரை இழந்து வருகின்றனர். இதனை தடுப்பதற்கு அரசு போதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும். அதேபோல் இந்த செம்மரக் கடத்தல் தொழில் செய்யும் பெரிய பெரிய கோடீஸ்வரர்கள், அரசியல்வாதிகள் போன்ற வியாபாரிகளை கைது செய்வதை விடுத்து, கூலி வேலைக்கு செய்பவர்களை பிடித்து சித்திரவதை செய்து கொலை செய்ததால், செம்மரக் கடத்தலை தடுக்க முடியாது. அடிப்படையில் செம்மர கடத்தலில் ஈடுபடும் பெரிய வியாபாரிகள், அரசியல்வாதிகள், பினாமிகள் யார் என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பேசினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion