தருமபுரியில் பள்ளிக்கல்வி துறை சார்பில் ஆசிரியர்களுக்கு வளைய பந்து பயிற்சி முகாம்
தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் மாநில அளவிலான உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மூன்று நாள் வளைய பந்து பயிற்சி முகாம் தருமபுரியில் நடைபெற்றது.
தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் மாநில அளவிலான உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மூன்று நாள் வளைய பந்து பயிற்சி முகாம் தருமபுரியில் நடைபெற்றது.
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் எதிர்வரும் புதிய விளையாட்டுப் போட்டிகளை திறம்பட நடத்திடும் வகையில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வளைய பந்து தொடர்பான மூன்று நாட்கள் உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் தருமபுரி அருகே தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த மூன்று நாள் பயிற்சிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கு.குணசேகரன் தொடங்கி வைத்தார்.
மேலும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் விளையாட்டுத் துறையின் மீது ஆர்வம் செலுத்தும் வகையிலும், அவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் அவர்களை தயார் படுத்தவும் இது போன்ற பயிற்சிகளை நடத்த பள்ளிக் கல்வி ஆணையரகம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த பயிற்சி முகாமில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் என தலா இருவர் என மொத்தம் 76 பேர் பங்கேற்று பயிற்சிகளை பெற்றனர். இந்த மூன்று நாள் பயிற்சியினை, உடற்கல்வி ஆசிரியர் அ.வேடியப்பன் ஆசிரியர்களுக்கு வழங்கினார்.
மாவட்ட செயலாளர் தேர்வு:
தருமபுரி மாவட்ட திமுகவில் கிழக்கு ,மேற்கு மாவட்ட செயலாளர் போட்டி இன்றி தேர்வு-திமுக தொண்டர்கள், ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.
அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதில் தற்பொழுது மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடந்து முடிவடைந்துள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு மற்றும் சேர்க்கப்பட்டும் அந்த மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்களை தேர்ந்தெடுக்க வேட்பு மனுக்கள் வாங்கப்பட்டு வந்தது. இதில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் முன்பு மேற்கு மாவட்டமாக இருந்த பென்னாகரம் தொகுதியும், கிழக்கு மாவட்டத்தில் இருந்த தருமபுரி தொகுதியையும், ஒன்று சேர்த்து கிழக்கு மாவட்டமாக பிரித்து அதற்கு தடங்கம் சுப்பிரமணியை மாவட்ட செயலாளராகவும், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பாலக்கோடு உள்ளிட்ட மூன்று தொகுதிகளை மேற்கு மாவட்டமாக பிரித்து அதற்கு முன்னாள் அமைச்சர் பழனியப்பனை மாவட்ட செயலாளராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை அடுத்து இருவரின் ஆதரவாளர்களும் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும், தருமபுரி ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமையில் தருமபுரி செட்டிக்கரையில் அரசு பொறியியல் கல்லூரி எதிரில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.