மேலும் அறிய

Food Safety Raid: சேலம் மாவட்டத்தில் மூன்று நாட்களில் 450 கிலோ பழைய இறைச்சிகள் அழிப்பு

இன்று நடைபெற்ற சோதனையில் பழைய மற்றும் சுகாதாரமற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 74.5 கிலோ மட்டன் மற்றும் சிக்கன் பறிமுதல்.

நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்டு 14 வயது சிறுமி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள உணவு கடைகளில் தரமான உணவுகள் தயாரிக்கப்படுகிறதா என்றும், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் காலாவதியான உணவுகளை அளிப்பதற்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி சேலம் மாவட்டம் ஆத்தூர், எடப்பாடி, தலைவாசல், சேலம் மாநகர் சூரமங்கலம் போன்ற பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் மூன்றாவது நாளாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், பழைய மற்றும் சுகாதாரமற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மட்டன் மற்றும் சிக்கன் - 74.5 கிலோ, சேமித்து வைக்கப்பட்ட சாதம் - 46.2 கிலோ, கெட்டுப்போன மீன்கள் - 60 கிலோ, நூடுல்ஸ் - 1.059கிலோ, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் - 11.7 கிலோ, என மொத்தமாக 193 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பாக அழிக்கப்பட்டது. மேலும் 12 உணவு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 9 உணவு நிறுவனங்களுக்கு ரூ. 15,000 அபராதம் விதித்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் உத்தரவிட்டுள்ளார்.

Food Safety Raid: சேலம் மாவட்டத்தில் மூன்று நாட்களில் 450 கிலோ பழைய இறைச்சிகள் அழிப்பு

முதல் நாள் நேற்று நேற்றைய முன்தினம் சேலம் மாநகர சாரதா கல்லூரி சாலை, புதிய பேருந்து நிலையம், அழகாபுரம், பேர்லாண்ட்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் உணவகங்களில் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கதிரவன் மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர் தலைமையில் குழுவினர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது தரமற்ற முறையில் இருந்த சவர்மா மற்றும் சிக்கன், மட்டன் உள்ளிட்ட 182 கிலோ இடையிலான உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தரமற்ற உணவுகள் விற்பனை கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

சேலம் மாநகரப் பகுதிகளில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 30க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையில் சேலம் மாநகரப் பகுதியில் உள்ள இருவதற்கும் மேற்பட்ட பிரபலமான கடைகளில் பழைய மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 182 கிலோ சிக்கன் மற்றும் மட்டன், 17 கிலோ சமைத்து வைக்கப்பட்டிருந்த அரிசி சாப்பாடு, 18 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், 500 கிராம் மயோனிஸ், 300 கிராம் உணவு நிறைவூட்டி, 2 கிலோ ஷவர்மா, சிக்கன் உள்ளிட்டவைகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவற்றை உடனடியாக அளித்தனர். மேலும் 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தரமற்ற உணவுகள் வைத்திருந்ததற்கான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 

Food Safety Raid: சேலம் மாவட்டத்தில் மூன்று நாட்களில் 450 கிலோ பழைய இறைச்சிகள் அழிப்பு

இரண்டாவது நாளான நேற்று சோதனையில் பழைய மற்றும் சுகாதாரமற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சிக்கன் - 200 கிலோ, ப்ரைடு சாதம் - 21 கிலோ, செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட சிக்கன் பிரியாணி - 10 கிலோ, மயோனைஸ் - 5.3 கிலோ, செயற்கை நிறமூட்டிகள் - 800 கிராம், தயார் செய்யப்பட்ட மசாலா - 8 கிலோ, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் - 4 கிலோ என மொத்தமாக 249.100 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பாக அழிக்கப்பட்டது. இதில் 15 ஹோட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 3 ஹோட்டல்களுக்கு தலா ரூ. 6000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் 450 கிலோ பழைய மற்றும் சுகாதாரமற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget