மேலும் அறிய

நைட்டி அணிந்து கோவிலுக்குள் வந்த திமுக பெண் கவுன்சிலர்.. அர்ச்சகர் பணி இடைநீக்கம்.. தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கோவிலை 12 மணி வரை திறந்திருந்தாகவும், பெண்களிடன் முறையாக நடந்து கொள்ளவில்லை எனக் கூறி, அர்ச்சகருக்கு எதிராக குற்றப்பத்திரிகை அளிக்கப்பட்டதுடன், பணி இடைநீக்கமும் செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட கிருஷ்ணா நகர் பகுதியில் ஸ்ரீ சீதாராமச்சந்திர மூர்த்தி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இக்கோவிலில் மேம்பாட்டு பணி நடைபெற்று வருவதை பார்வையிடச் சென்ற திமுக பெண் கவுன்சிலர் மஞ்சுளா நைட்டி அணிந்துகொண்டு கோவிலுக்குள் சென்றதாக கூறப்படுகிறது. அதனை அர்ச்சகர் கண்டித்துள்ளார், அதற்கு பெண் கவுன்சிலர் மஞ்சுளா ஒருமையில் அர்ச்சகரை திட்டியதாக கூறப்படுகிறது. 

நைட்டி அணிந்து கோவிலுக்குள் வந்த திமுக பெண் கவுன்சிலர்.. அர்ச்சகர் பணி இடைநீக்கம்.. தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இதனால் அர்ச்சகராக பணியாற்றி வரும் கண்ணன் என்பவர் திமுக கவுன்சிலர் மஞ்சுளா மூலம் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறதாக கூறி, பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இதில் கடந்த 23 ஆண்டுகளாக சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணா நகரில் உள்ள ஸ்ரீ சீதா ராமச்சந்திர மூர்த்தி திருக்கோவில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறேன். தனக்கு 40-வது கோட்டத்தின் திமுக பெண் கவுன்சிலர் மஞ்சுளா கோவில் பணிகளை மேற்கொள்ளவிடாமல் தடுப்பதாவும், அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும் வீடியோவில் பேசி வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ மூலமாக எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு முழுகாரணம் திமுக கவுன்சிலர் மஞ்சுளாதான் என்றும் பேசியுள்ளார். இதில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வீடியோ மூலமான கோரிக்கை விடுத்துள்ளார்.

நைட்டி அணிந்து கோவிலுக்குள் வந்த திமுக பெண் கவுன்சிலர்.. அர்ச்சகர் பணி இடைநீக்கம்.. தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மேலும் அர்ச்சகர் கண்ணனிடம் அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரிக்கும்போது, திமுக பெண் கவுன்சிலர் மஞ்சுளா ஒருமையில் பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் திமுக பெண் கவுன்சிலர் மஞ்சுளா அர்ச்சகரை, அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஒருமையில் பேசும் காட்சிகள் உள்ளன. அருகில் இருந்த பெண்கள் அர்ச்சகருக்கு மரியாதை தருமாறு கூறியும் மஞ்சுளா, அர்ச்சகரை ஒருமையில் பேசி உள்ளார். எனக்கும், எனது குடும்பத்திற்கும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு முழுகாரணம் திமுக கவுன்சிலர் என்று கோவில் அர்ச்சகர் வெளியிட்டுள்ள வீடியோவால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக 40-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் மஞ்சுளாவை தொடர்புகொண்டு கேட்டபோது, கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக பொதுமக்கள் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் கோவில் அர்ச்சகரை கண்டிப்பதாகவும், அர்ச்சகர் வெளியிட்டுள்ள வீடியோவில் உண்மை இல்லை என்று கவுன்சிலர் மஞ்சுளா விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் அர்ச்சகர் அன்று இரவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக அர்ச்சகர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார், வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கோவிலுக்குள் நைட்டி அணிந்து வந்ததற்கு ஆதாரம் உள்ளது. ஆனால் எதிர்த்தரப்பு கூறுவது போல் ஆகம விதிகளுக்கு முரணாக கோவிலை 12 மணி வர திறந்திருந்தாகவும், பெண்களிடன் முறையாக நடந்து கொள்ளவில்லை எனக் கூறி, அர்ச்சகருக்கு எதிராக குற்றப்பத்திரிகை அளிக்கப்பட்டதுடன், பணி இடைநீக்கமும் செய்யப்பட்டார். தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எப்போது நடைபெற்றது என்பதற்கான விவரங்கள் இல்லை என்று அர்ச்சகர் கூறியுள்ளார். எனவே இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
Embed widget