மேலும் அறிய

தருமபுரி: மாற்றுத் திறனாளிகளை மிரட்டி நிலம் அபகரிப்பு...? - தாய் தீக்குளிக்க முயற்சி

மாற்றுத் திறனாளிகளை மிரட்டி நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக மாற்றுத் திறனாளிகளுடன், தாய் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி.

கடத்தூர் அருகே மாற்றுத் திறனாளிகளை மிரட்டி நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக மாற்றுத் திறனாளிகளுடன், தாய் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த வேப்பிலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜப்பன் குப்பு தம்பதியினருக்கு நான்கு பிள்ளைகள். இதில் இரண்டு ஆண், ஒரு பெண் ஆகிய மூன்று பிள்ளைகள் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள். இந்த நிலையில் இவர்களுக்கு முன்னோர்கள் வழி சொத்து, ஒரு ஏக்கர் மேட்டு நிலம் இருந்து வருகிறது. இந்த நிலத்தில் விவசாயம் செய்து, தங்களது குடும்பத்தை நடத்தி வருகின்றனர். ஆனால் இதில் மூன்று பிள்ளைகளும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளாக இருப்பதால், இவர்களது நிலத்தை அருகில் உள்ள உறவினர்களான சின்ராஜ், பவுனுக்காசி, பவித்ரா ஆகியோர் அபகரிக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.  மேலும் ஆதரவின்றி உள்ள இந்த குடும்பத்தினரை அடித்து துன்புறுத்தி, மிரட்டியும் வருகின்றனர். மேலும் வயதான தாய் மற்றும் 3 மாற்றுத் திறனாளி பிள்ளைகளை வைத்துள்ள இந்த குடும்பத்தினருக்கு ஆதரவு யாரும் இல்லாததால் அருகில் உள்ளவர்கள் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. காவல் துறை, வருவாய்த் துறை என பல்வேறு இடங்களில் புகார் மனு அளித்தோம். இதுவரை அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
 
தருமபுரி: மாற்றுத் திறனாளிகளை மிரட்டி நிலம் அபகரிப்பு...?  -  தாய் தீக்குளிக்க முயற்சி
 
மேலும் தங்கள் விவசாய நிலப் பகுதிகளுக்கு சென்றால், கொலை செய்துவிடுவேன் என மிரட்டி தாக்குகிறார்கள். அதனால் அந்த நிலத்தின் பக்கம் எங்களால் செல்ல முடியவில்லை எனக் கூறி குப்பு தனது இரண்டு மாற்றுத் திறனாளி பிள்ளைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்து, மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
 
இதனை தொடர்ந்து அருகில் இருந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் மண்ணெண்ணெய் கேனை பறித்து, பாதுகாப்பாக மீட்டனர். மேலும் தங்களது விவசாய நிலத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு கொடுக்காமல், ஏமாற்றி அபகரித்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். இதனால் தங்களது உயிருக்கு பாதுகாப்பில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் தங்கள் குடும்பத்துடன் இங்கே தற்கொலை செய்து கொள்வோம். மேலும் எங்கள் நிலத்தை அரசே எடுத்துக் கொள்ளட்டும் என கண்ணீர் மல்க மாற்றுத் திறனாளி பிள்ளைகளுடன், தாய் குப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து காவல் துறையினர் நான்கு பேரையும், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மன வளர்ச்சி குன்றிய பிள்ளைகளுடன், தாய் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Marina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
Annamalai:
Annamalai: "கெட்அவுட் மோடி? கெட்அவுட் ஸ்டாலின்? - நாளை காலை 6 மணிக்கு இருக்கு.. அண்ணாமலை சவால்
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
Accident Insurance: விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை
விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை
Embed widget