மேலும் அறிய
Advertisement
தருமபுரி: 6 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய தொப்பையாறு அணை- வினாடிக்கு 100 கன அடி நீர் திறப்பு
’’தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர், 5 கி.மீ தொலைவில் தொப்பையாற்றில் உள்ள தடுப்பணை நிரம்பி மேட்டூர் அணைக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது’’
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்த வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள தொப்பையாறு அணை 50 அடி உயரம் கொண்டது. இந்த அணைக்கு ஏற்காடு மலை (பின்பக்கம்), முத்தம்பட்டி வனம் மற்றும் மலைப் பகுதிகளிலிருந்து வரும் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இந்த அணையிலிருந்து தொப்பூர், கம்மம்பட்டி, வெள்ளாறு, செக்காரப்பட்டி உள்ளிட்ட ஏரிகளில் நிரப்புவாதல், 5,800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மேலும் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர், காவிரியில் கலந்து மேட்டூர் அணைக்கு செல்கிறது. இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டிற்கு பிறகு போதிய மலை இல்லாததால், அணைக்கு நீர்வரத்து இல்லாமல், அணை வறண்டு கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக தருமபுரி மாவட்டம் மற்றும் ஏற்காடு மலைப் பகுதியில் தொடர் கனமழை பெய்து வந்தது. இதனால் அணைக்கு தண்ணீர் வரத் தொடங்கியது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பி வருகிறது.
தற்போது தொப்பையாறு அணை 50 அடி உயரத்தில், 49 அடி உயரம் வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் 100 கன அடி தண்ணீரை, உபரிநீராக தொப்பையாற்றில் திறக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் மழையின் காரணமாக அணை நிரம்பி வருவதை கண்காணித்த அதிகாரிகள் இரு தினங்களுக்கு முன்பே ஆற்றங் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு தண்டோரா மூலம், ஆற்றை கடக்கவோ, ஆற்றில் குளிக்க கூடாது எனவும், பாதுகாப்பாகவும் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர், 5 கி.மீ தொலைவில் தொப்பையாற்றில் உள்ள தடுப்பணை நிரம்பி மேட்டூர் அணைக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு, தொப்பையாறு அணை நிரம்பி, உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், அந்த பகுதியில் உள்ள மக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
ஐபிஎல்
ஐபிஎல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion