மேலும் அறிய
Advertisement
தருமபுரி - திருவண்ணாமலை 4 வழிச்சாலையில் விரிசல்; புதிய சாலையின் உறுதி தன்மை கேள்விக்குறி
மழைநீர் விவசாய நிலங்களில் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து, சாலையையும் விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும் என விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிதாக அமைக்கப்பட்டு வரும் தருமபுரி - திருவண்ணாமலை 4 வழிச்சாலையில் ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டு சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் மழை நீர் வெளியேறும் இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையின் உறுதி தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரின் கனவு திட்டமான விபத்தில்லா சாலை அமைக்கும் திட்டத்தில், அரூர், மொரப்பூர், தானிப்பாடி வழியாக செல்லும் தருமபுரி-திருவண்ணாமலை பிரதான சாலை நான்கு வழி சாலையாக ரூ.1500 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சாலைப் பணி தற்போது 80 சதவீதம் முடிந்துள்ளது. இந்த சாலையில் பல்வேறு இடங்களில் உயரப்படுத்தியும், மேடாக இருக்கின்ற பகுதிகளை, பள்ளமாகவும் சமன் செய்துள்ளனர். மேலும் சாலையில் மழை விழுகின்ற தண்ணீர் வெளியேறுவதற்காக சாலையோரம் கழிவுநீர் கால்வாயும் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கழிவு நீர் கால்வாய்கள் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சாலை உயரப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் கழிவு நீர் கால்வாய்கள் அமைக்கப்படவில்லை. இந்த சாலையை உயரப்படுத்துவதற்காக மண் கொட்டப்பட்டுள்ளது.
தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து வருவதால், கால்வாய் இல்லாத இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையோரம் இருக்கின்ற மண் முழுவதுமாக கரைந்து, பெரிய பள்ளமாக இருந்து வருகிறது. மேலும் தருமபுரியில் இருந்து ஒடசல்பட்டி கூட்ரோடு இடையிலான பகுதிகளில் ஆங்காங்கே மண் அரிப்பு ஏற்பட்டுள்ள உருவாகியுள்ளது. இந்த பள்ளங்களுக்கும் சாலைகளுக்கும் இடையே ஒரு அடி மட்டுமே இருந்தது. இந்த இடங்களில் மேலும் மண் சரிவு ஏற்பட்டால், சாலை சரிந்து விழுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் உறுதித் தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.
அதேபோல் புதிய சாலை அமைத்து ஒரு மாதங்கள் கூட ஆகாத நிலையில் ஆங்காங்கே சாலையில் வெடிப்பு ஏற்பட்டு, விரிசல் உண்டாகியுள்ளது. இதனால் சாலை உயர படுத்தப்பட்டுள்ள இடங்களில் தார் சாலைக்கும், மண் இருக்கின்ற பகுதிகளுக்கு இடையே பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மழைக் காலங்களில் தண்ணீர் உள்ளே செல்லும் பொழுது சாலையில் பெரும் பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து மிகுந்த இந்த பரபரப்பான சாலையில் பெரும் விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. அதேபோல் சாலை உயரப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் பாலத்திற்கும் பக்கவாட்டில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர்களுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதில் அதிகப்படியான கனரக வாகனங்கள் செல்லுகின்ற பொழுது சாலை சரிந்து விழுவதற்கான வாய்ப்புகளும் இருந்து வருகிறது.
இந்நிலையில் கால்வாய் அமைக்கப்படாத இடங்களில் தண்ணீர் சாலையில் வருகின்ற தண்ணீர், சாலையை விட்டு வெளியேறுகின்ற பொழுது, மண்ணரிப்பு ஏற்பட்டு சாலையின் உறுதித்தன்மை பாதிக்கப்படுகிறது. அதே போல் அந்த தண்ணீர் முழுவதும் அருகில் உள்ள விவசாய நிலங்களில் தேங்குவதால் விவசாயிகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே தமிழ்நாடு அரசு இதில் கவனம் செலுத்தி தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்ட இடங்களில், விரிசல் ஏற்பட்டுள்ளதை ஆய்வு செய்து அப்புறப்படுத்திவிட்டு, புதிய தார் சாலையை தரமாக அமைக்க வேண்டும். அதேபோல் கால்வாய் இல்லாத இடங்களில் மண்ணரிப்பை தடுத்து சாலையின் உறுதி தன்மையை நிலை நிறுத்தும் வகையில் கால்வாய்கள் அல்லது பக்கவாட்டு சுவர்கள் அமைக்க வேண்டும். அதேபோல் பாலத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ள பக்கவாட்டு சுவர்களின் பழுதை உடனடியாக சரி செய்து கொடுக்க வேண்டும். மேலும் மழைநீர் விவசாய நிலங்களில் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து, சாலையையும் விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும் என விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion