மேலும் அறிய
Advertisement
தருமபுரி: கிணற்றில் குளிக்கும் போது மூழ்கி உயிரிழந்த மாணவரின் உடல் 2 நாட்களுக்கு பிறகு மீட்பு
இரண்டு நாட்கள் கிணற்றிலிருந்து நீர் முற்றிலுமாக அப்புறப்படுத்தப்பட்டு பின்னர் சடலமாக இருந்த நவீன்குமாரின் உடல் மீட்பு
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த தாதநாயக்கன்பட்டியை சேர்ந்த முனுசாமியின் மகன் நவீன்குமார் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து நேற்று மதியம் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளித்துள்ளனர். பின்னர் குளித்த பிறகு நண்பர்கள் அனைவரும் கரைக்கு திரும்பிய நிலையில் நவீன்குமார் மட்டும் வெளியே வராததால், சந்தேகம் அடைந்த, நண்பர்கள் அப்பகுதியில் சுற்று வட்டாரத்தில் நவீன்குமாரை தேடியும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து அவரின் உறவினர்களுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் நேற்று மதியம் முதல் கிணற்றில் உடலை தேடினர்.
தொடர்ந்து மாலை வரை தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் மாணவனை உடல் கிடைக்கவில்லை. இந்த கிணறு சுமார் 60 அடி ஆழம்வரை இருந்ததால், யாராலும் அக்கிணற்றில் நீந்தி தேட முடியாத முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் நேற்று மாலை தேடும் பணியை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதனை அடுத்து இன்று காலை முதல் சுமார் 7 மின் மோட்டார்கள் உதவியுடன் கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் முயற்சி நடைபெற்றது. இரண்டு நாட்கள் கிணற்றிலிருந்து நீர் முற்றிலுமாக அப்புறப்படுத்தப்பட்டு பின்னர் சடலமாக இருந்த நவீன்குமாரின் உடலை இரண்டு நாட்களுக்கு பிறகு தீயணைப்பு துறையினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தொப்பூர் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் நண்பர்களோடு குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அரூர் பெரிய ஏரி ராஜ வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றி, பொக்லைன் இயந்திரம் மூலம் கால்வாய் தூர்வாரும் பணி தொடக்கம்
தருமபுரி மாவட்டம் அரூர் பெரிய ஏரி சுமார் 169 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் உபரிநீர் வெளியேறும் ராஜவாய்க்கால் அரூர் நகரின் மையப்பகுதி வழியாக சென்று வாணியாற்றில் கலக்கிறது. மேலும் அரூர் பெரியார் நகர், பாட்சாபேட்டை, மஜீத்தெரு, தில்லை நகர், திரு.வி.க நகர், கோவிந்தசாமி நகர் உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் மற்றும் கழிவு நீர் செல்லும் கிளை கால்வாய்கள் ராஜ வாய்க்காலில் இணைந்து வாணியாற்றில் சேருகிறது.
இந்நிலையில், அரூர் சேலம் பிரதான சாலையோரத்தில் ராஜ வாய்க்கால் மற்றும் நீர்வழிப்பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்களை கட்டியுள்ளனர். இதனால், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்குவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர். இதையடுத்து, அரூர் பெரிய ஏரியின் ராஜ வாய்க்கால் செல்லும் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய் துறை அதிகாரிகள் ராஜ வாய்க்கல் அளவீடு செய்தனர்.
இதனை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் உதவியுடன் ராஜ வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அற்றும் பணிகளை வருவாய் மற்றும் பொதுப்பணித் துறையினர் செய்து வருகின்றனர். இதில் ஏரியின் உபரிநீர் வெளியேறும் கரையிலிருந்து கால்வாய் தூர்வாரும் பணி தொடங்கியது. நீண்ட நாட்களாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை நிறைவேறியதால், அரூர் பகுதி மக்கள் மிகுந்த மகிழச்சியடைந்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion