மேலும் அறிய
Advertisement
தருமபுரி அருகே காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்டிய வனத்துறை
தற்பொழுது மற்றொரு யானை கிராமப் புறங்களுக்குள் நுழைந்து இருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி அருகே தொடர்ந்து கரும்பு தோட்டத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானையை வனத்துறையினர் வனப் பகுதிக்குள் விரட்டினர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி வனப்பகுதியில் இருந்து கடந்த 4 மாதத்திற்கு முன்பு வெளியேறிய ஒரு மக்னா யானை, ஒரு ஆண் யானை இரண்டும், உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமத்திற்குள் நுழைந்து, விவசாய பயிர்களை சேதப்படுத்தியும், விவசாயி ஒருவரை தாக்கி உள்ளது. இதனை அடுத்து ஆனைமலையில் இருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானையை வரவழைக்கப்பட்டு இரு தினங்களுக்கு முன்பு மக்னா யானையை மயக்க ஊசி போட்டு வனத் துறையினர் பிடித்துள்ளனர். தொடர்ந்து லாரி மூலம் கொண்டு சென்று மக்னா யானையை மேற்கு தொடர்ச்சி மலையில் விடப்பட்டது. அப்பொழுது ஆண் யானை வனப் பகுதிக்குள் சென்றுள்ளது. தொடர்ந்து பிடிக்கப்பட்ட மக்னா யானை டாப்ஸ்லிப் மேற்கு தொடர்ச்சி மலையில் விடப்பட்டது.
தொடர்ந்து மற்றொரு ஆண் யானை வனப் பகுதியை விட்டு வெளியே வரும் பொழுது பிடிக்கும் முயற்சியை மேற்கொள்ள வனத் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த ஒற்றை ஆண் யானை ஈச்சம்பள்ளம் வனப் பகுதியை விட்டு வெளியேறி, தருமபுரி அடுத்த முத்து கவுண்டன்கொட்டாய் பகுதியில் காலை முதலே சுற்றி திரிந்து. இதனை தொடர்ந்து வனத் துறையினர் ஆண் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த ஆண் யானை பெருமாள் என்பவரின் கரும்பு தோட்டத்தில் நுழைந்து, கரும்பை சாப்பிட்டு ஓய்வெடுத்து வந்தது.
இதனால் வனத் துறையினர் யானையை கண்காணித்து வந்தனர். மேலும் மாலை நேரத்தில் யானை வெளியில் வரும்போது வனப் பகுதிக்கு விரட்ட திட்டமிட்டனர்.
அதனை தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட வனத் துறையினர் நேற்று மாலை யானையை காட்டுக்குள் விரட்டும் பணியை தொடர்ந்தனர். அப்பொழுது யானையை ஊருக்குள் நுழையாமல், வனப் பகுதிக்குள் விரட்ட பட்டாசு வெடித்தும், தீ மூட்டியும் யானையை கரும்பு காட்டுக்குள் இருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து காட்டு யானை கரும்பு காட்டில் இருந்து வெளியேறியது. அப்பொழுது வனத் துறையினர் பட்டாசு வெடித்து கொண்டே யானையை பென்னாகரம் நோக்கி விரட்டுச் சென்றனர். இதனையடுத்து யானை பாப்பாரப்பட்டி அருகே உள்ள சஞ்சீவிராயன் மலைப் பகுதிக்குள் நுழைந்தது. கடந்த நான்கு, ஐந்து மாதமாக இரண்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் நுழைந்து, பயிர்களை அழித்து வந்த நிலையில், ஒரு யானையை வனத் துறையினர் பிடித்ததை நினைத்து பொதுமக்களும், விவசாயிகளும் நிம்மதி அடைந்தனர். ஆனால் தற்பொழுது மற்றொரு யானை கிராமப் புறங்களுக்குள் நுழைந்து இருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுப்பதற்கு வனத் துறையினர் நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion