Dharmapuri : தருமபுரியில் கீழே கிடந்த ரூ. 11,000-ஐ காவலரிடம் ஒப்படைத்த நபர்.. குவியும் பாராட்டுக்கள்..
தருமபுரி பேருந்து நிலையம் அருகே கீழே கிடைத்த 11,000 ரூபாய் ரொக்க பணத்தை, காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்த லாரி உரிமையாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
கீழே கிடந்த பணம்:
தருமபுரி மாவட்டம் அரூர் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளர் அஸ்லம் பாஷா, தனது தாயை சிகிச்சைக்காக தருமபுரி அழைத்து வந்துள்ளார். தருமபுரி பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து வெளியில் வந்துள்ளார். அப்பொழுது சாலையில் ஆட்டோ அருகில், கேட்பாரற்று பணம் கிடந்துள்ளது. அந்த பணத்தை எடுத்து பார்த்ததில், இதில் 11 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் இருப்பது தெரிய வந்துள்ளது.
Also Read: All Pass: 9ஆம் வகுப்புக்கு ஆல்பாஸ்; ஆனால் இவர்களுக்கு மட்டும் கிடையாது - பள்ளிக் கல்வித்துறை
பணம் ஒப்படைப்பு:
இதனை தொடர்ந்து, பணத்தை தவறவிட்டு, யாராவது தேடி வருகிறார்களா என, சிறிது நேரம் காத்திருந்துள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் யாரும் வரவில்லை. இந்த பணத்தை தவறிவிட்டவர்களுக்கு, சேர வேண்டும் என எண்ணி, அருகில் இருந்த கடையில், பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைப்பதாக கூறினார். மேலும் பணத்தை தேடி யாராவது வந்தால், காவல் நிலையத்திற்கு போக சொல்லுங்கள் என தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு சென்று, காவல் ஆய்வாளர் நவாஸ்-யிடம், கேட்பாரற்று கிடந்த பணம் ரூ.11,000 ஐ ஒப்படைத்தார்.
பாராட்டு:
— DHARMAPURI DISTRICT POLICE (@POLICEDPI) June 7, 2022
மற்றவர்களின் பணத்திற்கு ஆசைப்படாமல், மனிதாபிமானத்துடன் கீழே கிடந்த ரூ.11,000 பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த அஸ்லாம் பாஷாவின் நேர்மையை, ஆய்வாளர் நவாஸ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும் பணத்தை ஒப்படைத்த அஸ்லாம் பாஷாவுக்கு காவல் துறை மற்றும் சமூக வலை தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Also Read: அடுக்கடுக்காய் குற்றச்சாட்டு வைத்த மதுரை ஆதீனம்! ஒரே வரியில் பதில் அளித்த அமைச்சர் சேகர் பாபு!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்