மேலும் அறிய

அரசு பள்ளியில் விநியோகிக்கப்பட்ட அழுகிய முட்டைகள் - மாணவர்கள் அதிர்ச்சி

பென்னாகரம் அருகே அரசு பள்ளி சத்துணவு மையத்திற்கு விநியோகிக்கப்பட்ட முட்டைகள் அழுகியிருந்ததால், மாணவர்கள் பெற்றோர்கள் புகார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் ஏரியூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிக்கு தமிழ்நாடு சொசைட்டி நிறுவனம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அரசால் நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மூலம் நாமக்கல்லில் இருந்து  முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நான்கு மண்டலங்களாக பிரித்து நாமக்கல், திருச்செங்கோடு, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் அடங்கிய ஒரு மண்டலத்தின் வாயிலாக அந்தந்த  ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மூலம் முட்டைகள் அரசு பள்ளி சத்துணவு மையங்களுக்கு வினியோகம்  செய்யப்படுகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த மாக்கனூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மதிய உணவில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக சமையலற்கள் முட்டையை வேக வைத்துள்ளனர் அப்பொழுது முட்டை உரிக்கும் பொழுது நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் அழுகி துர்நாற்றம் வீசுகின்ற நிலையில் இருந்துள்ளது. இதனை அறிந்த ஆசிரியர்களும் மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
 
இதனை அடுத்து சமையலர்கள் தலைமை ஆசிரியருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் புகார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அரசு அதிகாரிகள் முட்டையின் தரத்தை ஆய்வு செய்து, அழுகிய முட்டைகளை அப்புறப்படுத்தி விட்டு வேறு முட்டை கொடுத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் பாப்பாரப்பட்டி பிக்கிலி, புதுக்கரும்பு, மாங்கரை, கருபணம்பட்டி மாக்கனூர், பெரும்பாலை, அருகே உள்ள ஆலமரத்தூர்  புதூர் நாகமரை, ஏரியூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி மற்றும்  அரசு உயர்நிலைப் பள்ளிகளில் சத்துணவு மையங்களுக்கு கடந்த சில நாட்களாக மதிய உணவுடன் தரம் இல்லாத அழுகிய முட்டைகள் துர்நாற்றத்துடன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
 
இதுகுறித்து பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேலனிடம் கேட்டபோது,  மாக்கனூர் அரசு தொடக்கப்பள்ளியில் மட்டும் முட்டைகள் அழுகி நிலையில் இருப்பதாக புகார் கிடைத்தது. இதனை அடுத்து அந்த முட்டைகளை அப்புறப்படுத்தி விட்டு மாணவர்களுக்கு வேறு முட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வரை முட்டை வழங்கியவர்களின் ஒப்பந்தம் முடிந்து விட்டது. ஒருவேளை ஒப்பந்தம் முடிகின்ற தருவாயில் இருக்கின்ற முட்டைகளை அவர்கள் அப்படியே வழங்கி இருக்கலாம். ஆனால் இதனை அறிந்து தற்பொழுது அவர்களது ஒப்பந்தம் மாற்றப்பட்டு, வருகின்ற வாரங்களில் முட்டை வழங்குவதற்கான ஒப்பந்தம் வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற பள்ளிகளுக்கு எங்கும் இது போன்ற முட்டைகள் வழங்கப்படவில்லை. மற்ற எல்லா பள்ளிகளுக்கும் தரமான முட்டைகளை வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Embed widget