மேலும் அறிய

மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்

எந்த ஒரு நதி நீர் படுகையிலும் கட்டுமான பணியோ, அணையோ கட்டும்போது கடைமடை மாநிலத்தின் அனுமதி இன்றி கட்டக் கூடாது - செளமியா அன்புமணி


எந்த ஒரு நதி நீர் படுகையிலும் கட்டுமான பணியோ, அணையோ கட்டும்போது கடைமடை மாநிலத்தின் அனுமதி இன்றி கட்டக் கூடாது என்று தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி கூறியுள்ளார்.

மேகதாது அணை குறித்த கேள்விக்கு பதில் அளித்த சௌமியா, “மேகதாரா அணை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் காவிரி படுகையில் எந்த வித கட்டுமானமும் செய்யக்கூடாது என தீர்மானம் போடப்பட்டுள்ளது என்று அனைவரும் இணைந்து தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம். பாராளுமன்றம் நடந்து கொண்டிருக்கின்றது‌. மேகதாது குறித்த முக்கிய கேள்விகள் அங்கு கேட்கப்பட்டுள்ளது. அந்த கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் சொல்லி உள்ளனர். கடைமடை மாநிலங்களும், முதல் மடை மாநிலங்கள்  கட்ட வேண்டும் என்றால் காவிரி  கடைமடை மாநிலங்களில் கருத்து கேட்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

 

கடைமடை மாநிலங்களில் அனுமதி தேவை இல்லை என ஒரு அமைச்சர் பதில் சொல்லியுள்ளார். இது சட்டத்திற்கு புறம்பானது. எந்த ஒரு நதி நீர் படுகையிலும் கட்டுமான பணியோ, அணையோ கட்டும்போது கடைமடை மாநிலத்தின் அனுமதி இன்றி கட்டக் கூடாது. இன்றைக்கு மதியம் மருத்துவர் அன்புமணி முக்கியமான கேள்வி எழுப்பி உள்ளார். மேகதாது  அணை கட்டுவதற்கு திட்ட அறிக்கை கொடுப்பதற்கு அனுமதி இருக்கிறதா? கர்நாடக அரசுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார். காவிரி நதி நீர் ஆணையம் அனுமதி தரவில்லை எனக் கூறியுள்ளது. மத்திய அரசும் விரிவான விரிவான அறிக்கையில் அனுமதி தரவில்லை என கூறியுள்ளனர். மேகதாது அணை குறித்து பேச வேண்டிய தேவை இல்லை. கர்நாடக அரசு ஏற்கனவே நான்கைந்து  அணைகளை கட்டியுள்ளனர். 

750 டி.எம்.சி தண்ணீர் காவிரியில் வருகிறது என்றால் தமிழ்நாட்டுக்கு உரிமையான தண்ணீர் 404 டிஎம்சி ஆகும். ஆனால் அது குறைந்து தற்போது 172 டிஎம்சி தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.  12 மாதத்திற்கு தண்ணீரை பிரித்து தர வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பையோ மத்திய அரசின் தீர்ப்பையோ காவிரி நடுவர் தீர்ப்பையோ கர்நாடக அரசு மதிப்பதே இல்லை. தண்ணீர் நிரம்பிய பின்னரே உபரிநீராக வெளியேற்றுகின்றனர். உபரி நீரை நமக்கு தருகிறார்கள். நமது உரிமைக்கான நீரை அவர்கள் தரவில்லை. வெள்ள  உபரி நீரை மட்டுமே அவர்கள் தருகிறார்கள். அப்படித்தான் இதுவரை நடந்துள்ளது. எங்களுக்கு உரிமையான நீரை கொடுங்கள் என கேட்கிறோம். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள் என அன்புமணி ஏற்கனவே கூறி வருகிறார்” என்று சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
சொந்த ஊரில் எடப்பாடி பழனிசாமி திடீர் தீவிர ஆலோசனை... சட்டமன்றத்தில் பேசப்போவது என்ன?
சொந்த ஊரில் எடப்பாடி பழனிசாமி திடீர் தீவிர ஆலோசனை... சட்டமன்றத்தில் பேசப்போவது என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
Embed widget